திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிரபல நடிகர் ஏ ஆர் ரகுமானை தெரியாது என இதுக்குதான் சொன்னார்.. பத்திரிகையாளர் கொடுத்த விளக்கம்

தமிழ் மொழியில் அறிமுகமான ஏ ஆர் ரகுமான் ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏ ஆர் ரகுமான் மிக உயரிய விருதுகளான தேசிய விருது மற்றும் ஆஸ்கார் விருது உட்பட பல விருதுகளை வாங்கியுள்ளார்.

இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் லிமஸ்க் எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான 99 சாங்ஸ் படத்தின் மூலம் கதாசிரியராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இப்படி பன்முகத் திறமை கொண்ட ஏ ஆர் ரகுமான் பல்வேறு துறைகளில் கால் பதித்துள்ளார்.

ஒரு முறை தெலுங்கில் பிரபல நடிகரான பாலகிருஷ்ணனிடம் ஏ ஆர் ரகுமான் பற்றி கேட்டதற்கு அவர் யார் என தெரியாது என கூறியிருந்தார். ஆனால் ரகுமான் பாலகிருஷ்ணன் நடிப்பில் வெளியான நிப்பு ரவா எனும் படத்தில் இசையமைத்திருந்தார், இருப்பினும் ஏ ஆர் ரகுமானை எனக்கு தெரியாது எனக் கூறியிருந்தார்.

இதற்கு பலரும் பல கருத்துக்களை கூறியிருந்தனர். சமீபத்தில் பத்திரிக்கையாளர் ஆர் எஸ் அந்தணன் நடிகர் பாலகிருஷ்ணா ஏ ஆர் ரகுமானை தெரியாது என கூறியதற்கு உண்மையிலேயே தெலுங்கில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான பாடல்கள் எதுவுமே பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.

அதனால்தான் அவர் ஏ ஆர் ரகுமான் தெரியாது என கூறினார். மேலும் இசையில் வெற்றிகண்ட ஏ ஆர் ரகுமான் தெலுங்கில் வெற்றி பெற முடியவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இதனால்தான் பாலகிருஷ்ணா ஏ ஆர் ரஹ்மானை தெரியவில்லை என கூறியதற்கு காரணம் எனக் கூறியுள்ளார்.

balakrishna-actor-cinemapettai
balakrishna-actor-cinemapettai

Trending News