வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிரபல நடிகருக்கு எழுதிய கதையில் நடிக்கும் தளபதி விஜய்.. இணையத்தில் லீக்கான சீக்ரெட்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம் தான் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளது. இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்தாண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் 66 வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். வம்சி தெலுங்கில் தோழா, மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கி உள்ளார். தற்போது விஜயை வைத்து இவர் இயக்க உள்ள படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்.

இப்படம் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ள நிலையில் விரைவில் படம் பூஜையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படம் குறித்த கூடுதல் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவிற்காக இயக்குனர் வம்சி எழுதிய கதையில் தான் தற்போது தளபதி விஜய் நடிக்க இருக்கிறாராம். அந்த கதை தான் தளபதி 66 படமாக உருவாக உள்ளதாம்.

vijay-vamsi paidipally-thalapathy66
vijay-vamsi paidipally-thalapathy66

தளபதி விஜய் ஏற்கனவே தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார். சொல்லப்போனால் மகேஷ் பாபுவின் பெரும்பாலான படங்களை விஜய்தான் தமிழில் ரீமேக் செய்துள்ளார். எனவே மகேஷ் பாபுவிற்கு எழுதப்பட்ட கதை என்றால், அது தளபதி விஜய்க்கு நிச்சயம் கச்சிதமாக பொருந்தும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News