ரேடியோ ஜாக்கியாக தனது பணியைத் தொடங்கிய மிர்ச்சி செந்தில் தற்போது தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகராகவும் இருந்து வருகிறார். இவர் மதுரை சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
இதில் சரவணன் மீனாட்சி என்னும் தொடரின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். அதில் தன்னுடன் நாயகியாக நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இயக்குனர் சேர ன் இயக்கிய தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் இவர் அறிமுகம் செய்யப்பட்டார். இதனை அடுத்து செங்காத்து பூமியிலே எனும் படத்தில் நாயகனாக அறிமுகமாகி கண் பேசும் வார்த்தைகள் வெண்ணிலா வீடு போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் மாயன் மற்றும் மாறன் என்ற இரட்டை கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.
இவர் தனது யூடியூப் சேனலில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு ஜலதோஷம் இருப்பதால் மருத்துவரிடம் சென்றதாகக் கூறியுள்ளார். 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருந்தாலும் மருத்துவரின் அறிவுரைப்படி கொரோனா சுய பரிசோதனையை மேற்கொண்டு உள்ளார்.
பரிசோதனையின் முடிவில் தனக்கு வரும் நோய் தொற்று இல்லை என்று அவர் அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.