ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பாலிவுட் நடிகரை வளைத்து போட்ட ரகுல் பிரீத் சிங்.. பர்த்டேக்கு வெளிவந்த சர்ப்ரைஸ் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். கமல்ஹாசன் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தற்போது வரை படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தாமல் உள்ளனர்.

இருப்பினும் ரகுல் பிரீத் சிங் தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்தி தற்போது பிஸியாக பல படங்கள் நடித்து வருகிறார். நடிகைகள் பொருத்தவரை எப்போதுமே தங்களது ரகசியங்களை பற்றி சில காலங்கள் மறைத்து வைத்திருப்பார்கள். அப்படித்தான் ராகுல் ப்ரீத் சிங் தனது காதலை பற்றி கூறியுள்ளார். ஆனால் காதலனை இத்தனை நாள் வெளியில் காட்டாமல் வைத்திருந்தார்.

ஆனால் தற்போது அவர் பிறந்த நாளன்று அவரது சமூக வலைதள பக்கத்தில் தன் காதலுடன் நடக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இவர் தான் என்னுடைய காதலன் என அனைவருக்கும் வெளிக்காட்டி உள்ளார். பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாகனாய் என்பவர்தான் தன் காதலன் என கூறியுள்ளார்.

இதே போல அவரது காதலரும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ரகுல் பிரீத் சிங் தன்னுடைய காதலி என வெளிப்படையாக பதிவிட்டுள்ளார். இத்தனை வருடங்களாக தனது காதலரை வெளிக்காட்டாமல் ரகசியமாக வைத்திருந்த ரகுல் பிரீத் சிங் தன் பிறந்த நாளன்று தன் காதல் குறித்து வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.

rakul preet singh
rakul preet singh

தற்போது ரசிகர்கள் ரகுல் பிரீத் சிங் மற்றும் அவரது காதலர் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இத்தனை நாள் ஏன் இதனை மறைத்து வைத்திருந்தீர்கள் என ஒரு சில ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். மற்ற ஒரு சில ரசிகர்கள் ரகுள் பிரீட் சிங் காதலிக்கிறாரா என ஆச்சரியத்திலும் உள்ளனர்.

Trending News