தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் தான் அரவிந்த்சாமி. இயக்குனர் மணிரத்னத்தின் தளபதி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் அரவிந்த்சாமி. அதன்பின் பல்வேறு படங்களில் கதாநாயகனாக அறிமுகமாகி சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது வில்லன் மற்றும்
ரோஜா: 1992இல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரோஜா. இப்படத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா நடித்திருந்தார். இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த அனைத்து பாடல்களுமே ஹிட். இப்படத்தில் அரவிந்த்சாமி, அக்காவை பெண் பார்க்க வந்துவிட்டு தங்கை மதுபாலா திருமணம் செய்து கொள்வார். இப்படம் தற்போது வரை சிலருக்கு ஃபேவரட் படமாக உள்ளது. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
தாலாட்டு: 1993இல் பி மோகன் ராஜ் தயாரிப்பில் டி கே ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தாலாட்டு. இப்படத்தில் அரவிந்த்சாமி, சுகன்யா, சிவரஞ்சனி, கோவை சரளா, கவுண்டமணி, செந்தில் என பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தில் குழந்தை என்ற கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தார். இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
பம்பாய்: 1995இல் மணிரத்னம் இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான திரைப்படம் பம்பாய். இப்படத்தில் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் மதத்தைத் தாண்டி காதலை சொல்லும் படமாக இருந்தது. இப்படத்தில் சேகர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும், சைலாபானு கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா நடித்திருந்தார்கள். இப்படத்தின் பாடல்களும், படமும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது
மறுபடியும்: இளையராஜாவின் இசையில், பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மறுபடியும். இப்படத்தில் அரவிந்த்சாமி, ரேவதி, நிழல்கள் ரவி, ரோகிணி ஆகியோரும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் அரவிந்த்சாமி கௌரிஷங்கர் கதாபாத்திரத்தில், கணவனை பிரிந்து வாழும் துளசியின் மனப் போராட்டங்களை புரிந்து கொண்டு , அவர் வாழ்க்கைக்கான புது அர்த்தங்களை தேட துளசிக்கு உறுதுணையாக இருப்பார். இப்படத்தில் துளசியாக ரேவதி நடித்திருந்தார். இப்படத்தில் நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் பாடல் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
மின்சார கனவு: ராஜீவ் மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி பிரபுதேவா, கஜோல் என பலர் நடித்து திரைக்கு வந்த படம் மின்சார கனவு. இப்படத்தில் காதலுக்கு தூது அனுப்புவது கவனமாக இருக்க வேண்டும் என்பதை அழகாக சொல்லியிருப்பார் இயக்குனர் மணிரத்னம். இப்படம் 4 தேசிய விருதும், 3 மாநில விருதும் பெற்றது. இப்படத்தில் இசையமைத்த ஏ ஆர் ரகுமானின் அனைத்து பாடல்களுமே ஹிட் ஆனது. வணிக ரீதியாக இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.