சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கும் பிரியா பவானி சங்கர்.. வாய்ப்பை பக்காவாக பயன்படுத்தும் தந்திரம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். தற்போது இவர் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு சில படங்கள் தற்போது வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

ஹரிஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து ஓமன பெண்ணே எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தை OTT தளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதனால் தற்போது படத்தை புரமோஷன் செய்யும் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒரு சில நிகழ்ச்சிகளில் பேட்டியும் கொடுத்து வருகின்றனர். தற்போது படத்தின் புரமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளனர்.

oh-manapenne-cinemapettai
oh-manapenne-cinemapettai

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால் இந்த நிகழ்ச்சியில் சென்று தனது படத்தினை பற்றி வெளிப்படையாக தெரிவித்தாள் ரசிகர்கள் பலருக்கும் தெரியும். இதனால் படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதற்காக படக்குழுவினர் பிக்பாஸ் செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ப்ரியா பவானி சங்கர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார் என நினைத்து வருகின்றனர். ஆனால் அவர் தனது படத்தினை புரோமோஷன் செய்வதற்காக தான் செல்கிறார் என்பது பலருக்கும் தெரியாமல் உள்ளது. மேலும் படத்தை பற்றிய அப்டேட்களை கொடுத்துவிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர்.

Trending News