வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கண்ணம்மாவை தொடர்ந்து மற்றொரு சீரியலில் கதாநாயகன் திடீர் மாற்றம்.. திக்கித் திணறும் விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நாடகங்களையும் இல்லத்தரசிகளே விரும்பி பார்க்கப்படுகிறது. பாக்கியலட்சுமி, பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி, காற்றுக்கென்ன வேலி போன்ற நாடகங்களுக்கு ஏற்கனவே ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அவ்வப்போது முக்கிய கதாபாத்திரங்களை மாற்றிக் கொண்டே வருகின்றனர். சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அறிவுமதிக்கு பதில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியானது

அவரைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து, கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த கதாநாயகி விலகுவதாக தகவல்கள் கிடைத்தது. பாரதிகண்ணம்மா சீரியலில் ஏன் இந்த திடீர் மாற்றம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இச்சூழலில் தற்போது காற்றுக்கென்ன வேலி நாடகத்தில் நடித்து வந்த கதாநாயகன் விலகுவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

vijat-tv-serial
vijat-tv-serial-cinemapettai

காற்றுக்கென்ன வேலி நாடகத்தின் கதாநாயகன் தர்ஷன். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைக்கிளி என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானார். எனவே இனி வரும் நாட்களில் காற்றுக்கென்ன வேலி நாடகத்தில் தர்ஷனுக்கு பதில் சுவாமிநாதன் அனந்தராம் என்ற நடிகர் நடிக்க உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இவருக்கென பலலட்சம் பெண் ரசிகர்கள் உள்ளனர். இந்த சூழலில் இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலக்க உள்ளார்.

swaminathan-cinemapettai
swaminathan-cinemapettai

இதுபோன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நாடகத்திலிருந்து பிரபல கதாபாத்திரங்கள் மாற்றப்படுவதால் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் நேரடியாக பாதிக்கப்படும். அதே சமயத்தில் நாடகத்தின் முக்கிய கதாபாத்திரம் மாற்றப்பட்டால் பார்வையாளர்களும் விரும்பி பார்க்க மாட்டார்கள் என்கிற கருத்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Trending News