ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தொடர் தோல்விக்கு பின் ஜீவாவை தூக்கிவிட்ட இயக்குனர்.. இந்த 2 படம் இல்லன்னா கேரியர் கிளோஸ்

தமிழ் சினிமாவில் ஆசையாசையாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜீவா. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அதன்பிறகு தித்திக்குதே என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால் என்ன செய்வதென தெரியாமல் ஜீவா சினிமாவில் நடிக்கலாமா வேண்டாமா என குழப்பத்தில் இருந்துள்ளார்.

அப்போது அமீர் ஜீவாவிடம் ராம் படத்தின் கதையை பற்றி கூறியுள்ளார். இப்படத்தின் கதை ஜீவாவுக்கு பிடித்துப்போக படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். அதன் பிறகுதான் ராம் படம் உருவாகியுள்ளது. இப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

ஜீவா என்னதான் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மகனாக இருந்தாலும் சினிமாவில் வெற்றி கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். அதுவும் இவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அமீர் இயக்கத்தில் வெளியான ராம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதனால் தற்போது வரை ஜீவா இயக்குனர் அமீருக்கு விசுவாசமாக இருந்து வருகிறார்.  ஜீவா பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த ஒரே திரைப்படம் ராம் மட்டும்தான். மேலும் ஆரம்பத்தில் இயக்குனர்கள் யாரும் ஜீவாவின் நடிப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை ஜீவாவின் நடிப்பு சரியாக பயன்படுத்தி வெற்றி கொடுத்த இயக்குனர் அமீர் மட்டும் தான்.

ameer
ameer

அதன் பிறகு கோ படத்தில் இவரது நடிப்பு சரியாக பயன்படுத்திக் கொண்டவர் கேவி ஆனந்த். இவர்கள் இருவரும் தான் ஜீவாவின் திரை வாழ்க்கையில் முக்கிய இயக்குனர்களாக உள்ளனர். இதைத் தவிர எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜோடி போட்டு ஈ என்ற படத்தில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டாலும் மக்கள் மனதில் இன்றளவும் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது படங்கள் நடித்ததன் மூலம் தான் ஜீவா பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். தற்போது கூட கதை தேர்வில் ஒரு சில சொதப்பல்கள் நடந்துதான் வருகிறது. ஏனென்றால் கமர்சியல் ஹிட் கொடுக்க வேண்டும் என்று தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தாமல் தோல்விகளையும் சந்தித்து வருகிறார்.

Trending News