ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அடைமொழியோடு சொன்னா தான் இந்த 5 பேர் ஞாபகம் வரும்.. கதாபாத்திரத்தால் புகழ்பெற்ற நடிகர்கள்

பல பிரபல நடிகர்கள் சினிமாவிற்காக தன் பெயரை மாற்றிக் கொள்கிறார்கள். சில நடிகர்கள் தான் நடித்த படத்தின் பெயரை அடைமொழியாக மாற்றிக் கொள்கிறார்கள். பிரபலமானவராக இருந்தாலும் அவரின் பெயரை தனியாக சொன்னால் நமக்கு சட்டென்று ஞாபகம் வராது. அவருக்கென்று அமைந்திருக்கும் அடைமொழியுடன் அவர் பெயரைச் கூறினால் தான் அந்த நடிகரை அடையாளம் காணமுடியும். அந்த அளவுக்கு அடைமொழி நடிகர்களை பிரபலமாகியுள்ளது.

சிவாஜி கணேசன்: சிவாஜி கணேசனின் இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி ஆகும். இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். இவர் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் சிவாஜி வேடத்தில் நடித்திருந்தார். சிவாஜியின் நடிப்பு திறனை போற்றி தந்தை பெரியார், சிவாஜி கணேசன் என்று அழைத்தார். அதில் இருந்த அனைவரும் இவரை சிவாஜி கணேசன் என்று அழைத்தார்கள்.

அதன் பின்பு பராசக்தி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானார். சிவாஜி கணேசனின் தெளிவான மற்றும் உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல் வளமும், சிறந்த நடிப்பு திறனும் இருந்ததால் நடிகர் திலகம் என்றும் நடிகர் சக்கரவர்த்தி என்றும் மக்களால் அழைக்கப்பட்டார்.

sivajiganesan-cinemapettai-01
sivajiganesan-cinemapettai-01

ஜெமினி கணேசன்: ஜெமினி கணேசனின் இயற்பெயர் ராமசாமி கணேசன். ஜெமினி நிறுவனம் தயாரித்த பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த கணேசன் 1952ல் வெளியான தாயுள்ளம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தில் ஆர் எஸ் மனோகரன் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன்பின்பு கதாநாயகனாக நடித்த மனோகர் வில்லனாகவும், வில்லனாக நடித்த ஜெமினி கணேசன் காதல் கதாநாயகனாக வலம் வந்தார். அடுத்தடுத்து ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றி புகழ் பெற்றதால் ஜெமினிகணேசன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

gemini ganesan
gemini ganesan

நிழல்கள் ரவி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நிழல்கள் ரவி. இவர் தமிழில் முதன்முதலில் 1980 இல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடன் சந்திரசேகர், ரோகிணி ஆகியோருடன் நடித்திருந்தார்கள். நிழல்கள் படத்திற்கு பிறகு இவர் நிழல்கள் ரவி என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு பல மொழிகளில் 500க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

nizhalgal ravi
nizhalgal ravi

ஜித்தன் ரமேஷ்: பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் மகன் நடிகர் ரமேஷ். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார். ஆர்கே வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 2005 இல் வெளியான திரைப்படம் ஜித்தன். இப்படத்தில் ரமேஷ், பூஜா, சரத்குமார், லிவிங்ஸ்டன், நளினி என பலர் நடித்திருந்தார்கள். தமிழ் சினிமாவில் ரமேஷ் நடித்த முதல் திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு பிறகு ஜித்தன் ரமேஷ் என்று அழைக்கப்பட்டார். அதன்பிறகு இவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. ஜித்தன் ரமேஷ் 2011ஆம் ஆண்டு வெளியான வானம் படத்தை தயாரித்துள்ளார். இவர் மீண்டும் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையால் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். ஜித்தன் ரமேஷ் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

jithan-ramesh-bigg-boss-4
jithan-ramesh-bigg-boss-4

ஜெயம் ரவி: திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும், இயக்குனர் ராஜாவின் தம்பியும் ஆனவர்தான் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் ராஜா இயக்கத்தில் 2002இல் காதல் திரைப்படமாக வெளியான படம் ஜெயம். இப்படத்தில் ரவி, சதா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரவியின் முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதால் ஜெயம் ரவி என எல்லோராலும் அழைக்கப்பட்டார். அதன்பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, நிமிர்ந்து நில், தனி ஒருவன், கோமாளி என பல வெற்றிப்படங்களை தந்துள்ளார். தற்போது ஜெயம்ரவி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

jayam-ravi
jayam-ravi
- Advertisement -

Trending News