திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

வியாபார ரீதியாக வெற்றி.. விஜய், சூர்யாவுக்கு நூல் விட்ட அஜித்தின் ஃபேவரைட் இயக்குனர்

சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சிவா அதனை தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து அஜித் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து சிவா இயக்கியுள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

என்னதான் அண்ணாத்த படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும் படம் வியாபார ரீதியாக நல்ல வசூலை பெற்றுள்ளது. அதன்படி வெறும் இரண்டே நாளில் அண்ணாத்த படம் 112 கோடி வசூல் செய்து புதிய சாதனையையே படைத்து விட்டது. அதனால் படம் குறித்து வரும் நெகடிவ் கமெண்ட்களை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் சிவா அடுத்ததாக நடிகர் சூர்யாவிற்கு கதை தயார் செய்துள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து சிவா கூறியிருப்பதாவது, “சூர்யா சாரின் சூரரைப் போற்று, மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்களை பார்த்தேன். சூப்பராக உள்ளது. இரண்டும் மிகச்சிறந்த படங்கள். மிகச்சிறந்த இயக்குனர்கள். மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார் சூர்யா சார்.

ஜெய் பீம் படத்தில் சூர்யா சார், மணிகண்டன் சார் அனைவரது நடிப்பும் மிகவும் பிடித்திருந்தது. அடுத்ததாக சூர்யா சாருடன் பணிபுரிய ஆவலுடன் இருக்கிறேன். அவருக்காக செம சுவாரசியமான கதை தயார் செய்து வைத்துள்ளேன்” என மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இதுமட்டுமல்ல தளபதி விஜயுடனும் இவர் ஒரு படம் பண்ண உள்ளாராம். அதுகுறித்த அப்டேட்டையும் இந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். அதன்படி நடிகர் விஜய் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நல்லதே நடக்கும் என சிவா குறிப்பிட்டுள்ளார்.

இதனால் விஜய் மற்றும் சூர்யாவை வைத்து சிவா படம் இயக்குவது உறுதியாகி விட்டது. அண்ணாத்த படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், விமர்சன ரீதியாக பலர் மோசமான விமர்சனங்களையே தெரிவித்து வருகிறார்கள். அதனாலோ என்னவோ சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் சற்று அச்சத்தில் உள்ளனர்.

Trending News