வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பிக் பாஸில் ஒரு வாரத்திற்கு இவ்வளவு சம்பளமா.? ராஜு, பிரியங்காவை பின்னுக்குத்தள்ளி அண்ணாச்சி

விஜய் டிவியில் பிக்பாஸ் ஆரம்பிக்கப்படுகிறது என்றாலே மற்ற தொலைக்காட்சிகள் பெரும் அச்சத்தில் இருக்கும். ஏனென்றால் பிக் பாஸ் மற்ற தொலைக்காட்சியின் டிஆர்பியை தட்டி தூக்கி எப்போதுமே முதலிடத்தில் இருக்கும். அந்த அளவுக்கு பிக்பாஸ்க்கு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

பிக்பாஸில் அதிக செலவுகள் செய்யப்பட்டு செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெரும் போட்டியாளர்களுக்கு வாரம் இவ்வளவு என சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் முந்தைய சீசன்களில் ஒரு கோடி வரை சம்பளம் வாங்கியவர்களும் உண்டு. பிக்பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்கள் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

பிக்பாஸ் ஆரம்பித்த முதல் வாரத்திலேயே நமிதா மாரிமுத்து வெளியேறிவிட்டார். இரண்டாவது வாரத்தில் நாடியா, மூன்றாவது வாரத்தில் அபிஷேக் ராஜா, நான்காவது வாரத்தில் சின்னப்பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டார்கள். பிக்பாஸ் வீட்டில் மீதமுள்ள 14 போட்டியாளர்கள் வாரம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

பிக்பாஸ் வீட்டில் அதிகபட்சமாக அபிநய் ஒருவாரத்திற்கு 2.75 லட்சம் சம்பளம் வாங்குகிறார். இவருக்கு அடுத்து காஸ்ட்யூம் டிசைனர் மதுமிதாவிற்கு 2.5 லட்சம் வாரம் கொடுக்கப்படுகிறது. அதையடுத்து இமான் அண்ணாச்சிக்கு 1. 75 லட்சம் வழங்கப்படுகிறது. இவரைத் தொடர்ந்து ராஜுக்கு ஒரு வாரத்திற்கு 1.5 லட்சம் கொடுக்கப்படுகிறது.

அதன் பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தாலும் பிரியங்காவிற்கு 1.2 லட்சம் கொடுக்கப்படுகிறது. பிரியங்கா போல் பாவனிக்கும் வாரம் 1.2 லட்சம் வழங்கப்படுகிறது. இசைவாணி மற்றும் வருண் இருவருக்கும் தலா ஒரு லட்சம் வழங்கப்படுகிறது.

அக்ஷரா, ஐக்கி, தாமரை, சிபி, நிரூப் ஆகிய ஐவருக்கும் ஒரு வாரத்திற்கு தலா 70 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளத்தை அறிந்த ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு இவ்வளவு சம்பளமா என ஆச்சரியப்படுகிறார்கள்.

Trending News