வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கின்னஸ் ரெக்கார்டுக்கு போராடும் பார்த்திபன்.. அசால்டாக சாதித்துக் காட்டிய பிரபல இயக்குனர்

இயக்குனர் இஷாக் ஒரே முறையில் தொடர்ச்சியாக 2 மணி 3 நிமிடம் 30 வினாடிகளில் புதுமுக நடிகர்களை கொண்டு அகடம் என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார். இப்படம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

இஷாக் மீண்டும் ஒரு புதிய முயற்சியில் 12 மணி நேரத்தில் திரைக்கதை எழுதி, படமாக்கப்பட்டுள்ள 181 என்ற படத்தை இயக்கியுள்ளார். 181 படத்திலும் புதுமுக நடிகர்களே நடித்துள்ளார்கள். ஜெமினி, ரீனா கிருஷ்ணா, விஜய் சந்துரு என பலர் நடித்துள்ளார்கள்.

இயக்குனர் இப்படத்தைப் பற்றி கூறுகையில் இது திகில் படம் என்றாலும் பெண்களின் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமையை தடுக்கும் நோக்கத்தில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் 181 படம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இஷாக் இப்படத்திற்கு முன்னதாக பிக்பாஸ் பிரபலம் ஆரி அர்ஜுனை வைத்து நாகேஷ் திரையரங்கம் என்ற படத்தை இயக்கி இருந்தார். அதனால் 181 படத்தின் முதல் போஸ்டரை நடிகர் ஆரி அர்ஜுன் தீபாவளி அன்று வெளியிட்டார். உலக சினிமாவில் முதல்முறையாக 12 மணி நேரத்தில் திரைக்கதை எழுதி உருவாக்கிய படம் 181 இயக்குனர் இசாக் மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளார்.

பார்த்திபனும் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தற்போது இயக்க உள்ள படத்தை தொடர்ச்சியாக எடுக்க திட்டமிட்டுள்ளார். மேலும் குறைந்த நேரத்தில் கதை எழுதி ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் கூடிய விரைவில் பார்த்திபனும் கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என பலரும் கூறி வருகின்றனர்.

ஆனால் பார்த்திபனுக்கு முன்பே இசாக் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளதால் ஒரு சிலர் நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் என்னும் சொல்லும் போது இருக்கு இசாக் பார்த்திபனை விட பல சாதனைகள் படைப்பார் என கூறிவருகின்றனர்.

Trending News