புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கட்டியணைத்து பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா.. செம்ம க்யூட்டான போஸ்டர் வெளியிட்ட விக்னேஷ் சிவன்

கோலிவுட் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் நடிகை நயன்தாரா இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து திரைபிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். டிவிட்டர் இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் நயன்தாராவிற்கு வாழ்த்து பொழிந்து வருகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் சாதாரணமாக அல்ல. நள்ளிரவில் கேக் கட்டிங், பார்ட்டி என பிரம்மாண்டமாக தனது பிறந்தநாளை நயன்தாரா கொண்டாடி உள்ளார். இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் செய்துள்ளார். முன்னதாக விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா சர்ப்ரைஸ் கொடுத்தது போல தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். நயன்தாராவை கட்டி அணைத்த விக்னேஷ் சிவன்

அதுவும் இந்த முறை நயன்தாரா இரண்டு கேக்குகளை வெட்டி பிறந்த நாளை கொண்டாடி உள்ளாராம். அதன்படி ஒன்றில் நயன் என்றும், மற்றொன்றில் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் எழுதப்பட்ட இரண்டு கேக்குகளை நயன்தாரா வெட்டியுள்ளார்.

தனது வருங்கால கணவர் அளித்த பிறந்த நாள் சர்ப்ரைஸை கண்டு மகிழ்ந்த நயன்தாரா விக்னேஷ் சிவனை கட்டியணைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதவிர தற்போது நயன்தாரா தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா கண்மணி என்ற பெயரில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் பிறந்த நாளை முன்னிட்டு Happy Birthday to our Kanmani என படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

nayanthara-krk
nayanthara-krk

இதைவிட சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் விக்னேஷ் சிவன் எப்போதுமே நயன்தாராவை தங்கமே என்று தான் அழைப்பாராம். ஆனால் இந்த முறை ஹாப்பி பர்த்டே கண்மணி, தங்கமே என் எல்லாமே என அவரது வருங்கால மனைவிக்கு வாழ்த்து மழையை பொழிந்து இன்ஸ்டாகிரமில் பதிவு செய்துள்ளார்.

Trending News