திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

முத்தழகு சீரியலுக்கு போட்டியாக.. ஜீ தமிழ், கலர்ஸ் டிவியில் வரிசையாக தரையிறக்கும் புத்தம் புது சீரியல்கள்!

விஜய் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் ‘முத்தழகு’. இது ஒரு கிராமத்துப் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கிராமத்து பாணியில் உருவான கதைக்களம் என்பதால் மக்களின் வரவேற்பை அதிகம் பெற்று வருகிறது. இதில் ஆசிஸ் கதாநாயகனாகவும் சோபனா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இதில் முக்கிய வேடத்தில் மௌனராகம் நெடுந்தொடரில் கலக்கிய நடிகர் ஆனந்த் பாபுவும் நடிக்கிறார்.

மேலும் பேச்சி என்னும் கதாபாத்திரத்தில் லட்சுமி வாசுதேவனும் நடிக்கிறார்கள். இந்த சீரியல் 3:30 மணிக்கு நவம்பர் 15 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் எங்கு, விஜய் டிவி இப்படி பல சீரியல்களை களமிறக்கி மக்களின் செல்வாக்கையும் டிஆர்பி யையும் தட்டி செல்லுமோ என்ற அச்சத்தில் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களான ஜீ தமிழும் கலர்ஸ் தமிழும் புதிய சீரியல்களை களம் இறக்கப் போகிறார்கள்.

இதில் ஜீ தமிழ் ‘பேரன்பு’ என்னும் புதிய சீரியலை வரும் நவம்பர் 29 முதல் ஒளிபரப்பலாம் என கணிக்கப்படுகிறது. ஆனால் இன்னும் இந்த சீரியலின் நடிகர் நடிகைகள் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. புதிதாக சீரியல் ஒன்று வரப்போகிறது என்ற தகவல்களை மட்டும் வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர்.

மேலும் இந்த ‘பேரன்பு’ சீரியலில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக ‘யாரடி நீ மோகினி’ சீரிய சீரியலின் நடிகர்களான ஸ்ரீ மற்றும் நட்சத்திரா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. கூடிய விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழ் சேனல் புதிதாக ஒரு சீரியலை ஒளிபரப்ப போவதாக தகவல்கள் வெளியானது. இதற்கு ‘வள்ளி திருமணம்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். ஆனால் இதிலும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரமும் ஒளிபரப்பாகும் நேரம் பற்றிய விபரமும் வெளியிடவில்லை. அதி விரைவிலேயே இதற்கான ப்ரோமோவை வெளியிடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு விஜய் டிவிக்கு மாறி மாறி டப் கொடுக்க காத்திருக்கும் ஜீ தமிழும் கலர்ஸ் தமிழும், தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் தொலைக்காட்சியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடிக்குமா என பொருத்திருந்து பார்க்கலாம்.

Trending News