வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிக்பாஸில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வைல்ட் கார்ட் போட்டியாளர்.. அதிர்ச்சியில் உறைய வைத்த வீடியோ

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது அனுதினமும் சுவாரசியம் குறையாமல் மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. இன்னிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வைட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளார்.

ஏனென்றால் தற்போது வெளியாகி உள்ள புரோமோ ஒன்றில் பிக் பாஸ் சக போட்டியாளருக்கு பரமபதம் டாஸ்க் ஒன்றை கொடுத்து விளையாட சொல்கிறார். அப்போது ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு பரிசு வழங்கப்பட்டு அதை இமான் அண்ணாச்சியை துறந்து பார்க்கிறார்.

கடைசியாக உள்ள ஒரு பரிசு பெட்டியில் திடீரென்று ஒரு நபர் காட்டப்படுகிறது. அது அபிஷேக் ராஜா போன்று பின் புறத்தில் இருந்து பார்த்தால் தெரிகிறது. ஆனால் அவர்தான் என்பது இனி வரும் நிகழ்ச்சியை பார்த்தாதான் தெரியும் .ஆனால் இணையத்தில் அந்த நபர் அபிஷேக் ராஜா தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன் இந்த சீசனை பொருத்தவரை கண்டன்ட் அதிகமாக கொடுத்த ஒரே கன்டஸ்டன்ட்ஸ் அபிஷேக் ராஜா என்பதால் அவரை மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைத்தால் டிஆர்பி ரேட்டிங் எகிறும் என்பதால் விஜய்டிவி பக்கா ப்ளான் போட்டு காய் நகர்த்தி இருக்கலாம்.

ஏற்கனவே அபிஷேக் ராஜா, பிரியங்கா நிரூப்புடன் சேர்ந்து செய்த அட்ராசிட்டி அளவே இல்லை. இதனால் அபிஷேக் பெரிதும் விமர்சிக்கப்பட்டு மக்கள் அளித்த குறைந்த வாக்கின் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது வாரமே வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே கமலை அசிங்கமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. கமலை அசிங்கப்படுதினாலும் விஜய் டிவிக்கு வேற வழி இல்ல போல

தற்போது மீண்டும் பிக் பாஸ் சீசன்5ல் கலந்து கொண்டால் அவருடைய நடவடிக்கையில் மாற்றம் இருக்குமா? அல்லது அதேபோன்றுதான் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News