வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நிமிர் பட இயக்குனருடன் 28 வருடம் கழித்து இணையும் பிரபல நடிகை.. அடேங்கப்பா 700வது படமா!

தமிழ் சினிமாவிற்கு 1983ஆம் ஆண்டு வெளிவந்த முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஊர்வசி. அதன்பிறகு இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்.

இன்னிலையில் தற்போது ஊர்வசியை பிரபல இயக்குனர்கள் குணச்சித்திர ஒப்பந்தம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடைசியாக இவரது நடிப்பில் சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் நடிகை ஊர்வசி அடுத்ததாக நடிக்க உள்ள தன்னுடைய 700வது படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. ஏனென்றால் 28 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் பிரியதர்ஷன் இடமும் என்ற படத்தில் நடித்த ஊர்வசி தற்போது தமிழில் அப்பத்தான் என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

priyadharshan-instra
priyadharshan-instra

இந்த தகவலை பிரியதர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் மலையாள இயக்குனரான பிரியதர்ஷன் தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நிமிர்’ படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஊர்வசியின் 700வது படமான அப்பத்தா திரைப்படத்தில் ஊர்வசிக்கு அழுத்தமான கதாபாத்திரம் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் ஊர்வசி அப்பத்தா திரைப்படத்துடன் எட்டுப் படங்களை தன் வசம் வைத்துள்ளார்.

ஆகையால் தொடர்ந்து நடிகை ஊர்வசி படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அப்பத்தா படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்த முழு விவரமும் கூடியவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News