திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

3 பேரை திடீரென ஒதுக்கிவைத்த அர்ஜுன்.. சர்வைவரால் தடுமாறும் ஜீ தமிழ் டிஆர்பி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ சர்வைவர். 18 பேர் கலந்துகொண்ட இந்த போட்டியில் இதுவரை 7 பேர் எலிமினேட் ஆகி வெளியேறி உள்ளனர். இந்த ஷோ தற்போது 70 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெறுகிறது.

தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வாரத்தில் நடிகர் உமாபதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற போட்டியாளர்களுக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் நடிகர் விக்ராந்த் மற்றும் வனேசா ஆகியோருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக போட்டியாளர்கள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற போட்டியாளர்களுக்கும் தொற்று பரவாமல் இருப்பதற்காக தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பற்றிய செய்தியை ஜீ தமிழ் நிர்வாகம் ரகசியமாக வைத்துள்ளது.

இதனால் தற்போது சர்வைவர் நிகழ்ச்சி குழப்பமான சூழ்நிலையில் இருந்து வருகிறது. நடிகர் விக்ராந்த் போட்டியில் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

தற்போது மூன்றாம் உலகத்தில் இருக்கும் நந்தா மற்றும் சரண் இருவருக்கும் போட்டி நடத்தப்பட உள்ளது. அதில் வெல்பவர் இறுதிப்போட்டிக்கு செல்ல உள்ளார். சர்வைவர் நிகழ்ச்சி விரைவில் இறுதி கட்டத்தை எட்ட உள்ளதால் இந்நிகழ்ச்சிக்கு தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

Trending News