திரையுலகில் ஹீரோக்கள் எத்தனை வயதானாலும் ஹீரோவாகவே நடிக்கலாம். ஆனால் ஹீரோயின்களுக்கு இந்த சலுகை கிடையாது. குறிப்பிட்ட வயது வரை மட்டுமே ஹீரோயினாக நடிப்பார்கள். ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறைந்து விட்டால் அக்கா, அண்ணி, போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே அணுகுவார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகை ஒருவர் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஹீரோயினாக நடிக்க போகிறேன் என கூறி ரீ என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறாராம் அந்த இரண்டெழுத்து நடிகை. நடிகை கோலிவுட்டில் அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிகை ஒப்பந்தமான நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் படத்திலும் நடிகை நடித்தார். அந்த படம் தாறுமாறான வெற்றி பெற்றதால் நாம் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டோம் என நினைத்த நடிகை திடீரென அவரது சம்பளத்தை உயர்த்தி விட்டார்.
ஆனால் சம்பளத்தை உயர்த்திய பின்னர் நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. நடிகையும் வாய்ப்பிற்காக காமெடி நடிகருக்கு ஜோடியாகவும் நடித்தார். ஆனால் அப்போது விழுந்த அவரின் மார்க்கெட் மீண்டும் எழவேயில்லை. அதன் பின்னர் சுத்தமாக வாய்ப்பு கிடைக்காததால் நடிகை கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆசைப்படும் நடிகை அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளாராம். ஆனால் நடிகையை தேடி வரும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கதாநாயகி வேடம் தான் வேண்டும் என நடிகை அடம்பிடித்து வருகிறாராம்.
இத்தனை ஆண்டுகள் கழித்து நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதே அதிசயம் தான். இதில் நடிச்சா ஹீரோயினா தான் நடிப்பேன் என அடம்பிடிக்கும் நடிகையின் பேச்சை கேட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மீண்டும் நடிகைக்கு வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம் என பேசிக்கொள்கிறார்களாம்.