திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அஜித்துடன் நடித்த குட்டி பாப்பாவா இது.? மளமளவென வளர்ந்து ஹீரோயினாக மாறிய புகைப்படம்

சின்னத்திரையில் பிரபலமான ஜீ தமிழ் தொலைக்காட்சி புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் மாம் ரீயூனியன் என்ற நிகழ்ச்சியை விரைவில் ஒளிபரப்ப உள்ளது.

அதில் பிரபல சின்னத்திரை நடிகைகள் தங்களின் குழந்தைகளுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். அதற்கான ப்ரோமோவை ஜீ தமிழ் வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சி 2 சீசன்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இரண்டு சீசன்களிலும் பங்கு பெற்ற போட்டியாளர்கள் மீண்டும் சந்திக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. அது முன்னாள் போட்டியாளராக கலந்து கொண்ட குழந்தை நட்சத்திரம் யுவீனா தன் அம்மாவுடன் கலந்து கொள்கிறார்.

அவர் வேறு யாருமல்ல வீரம் திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடித்த குட்டி பாப்பா தான். அந்தப் படத்தை தொடர்ந்து ஸ்ட்ராபெர்ரி, சர்க்கார் போன்ற திரைப்படங்களிலும் யுவீனா நடித்துள்ளார். தற்போது 13 வயதாகும் இவர் தன் அம்மாவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில் யுவீனா தன் அம்மாவுக்கு இணையான உயரத்தில் கொள்ளை அழகுடன் மிளிர்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் குட்டி பாப்பா எவ்வளவு வளர்ந்து விட்டார் என்று ஆச்சரிய படுகின்றனர். மேலும் தமிழ் சினிமாவின் அடுத்த கதாநாயகி தயாராகி விட்டார் என்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

யுவீனா கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி ஜீ தமிழில் வரும் ஞாயிறு மாலை ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

Yuvina
Yuvina

Trending News