வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஷங்கர் கூட்டணியில் இணைந்த ஜாக்கிஜான்.. மிரட்டலாக உருவாகும் சண்டைக் காட்சி

மிகப்பெரிய பட்ஜெட்டில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2005 இல் வெளியான திரைப்படம் அந்நியன். இப்படத்தில் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ் ராஜ், நாசர் என பலர் நடித்திருந்தார்கள்.

அந்நியன் படத்தில் அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர் ஒருவரில் மாறி மாறி வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் ஷங்கர். இந்தியன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

பென் மூவிஸ் தயாரிக்க உள்ள அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கை ரன்வீர் சிங்கையை கதாநாயகனாக வைத்து இயக்குனர் ஷங்கர் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறுகையில், அந்நியன் படத்தின் கதை உரிமம் தன்னிடம் தான் உள்ளது என்றும் தன் அனுமதி இல்லாமல் யாரும் பணமாக்க முடியாது என்று சொல்லி இருந்தார்.

இந்நிலையில், தற்போது ஜாக்கி சான் வைத்து அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தயாரிக்க உள்ளதாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் தரப்பில் சொல்லப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை தொடங்க உள்ளதாக திட்டமிட்டுள்ளார்.

ஜாக்கிசானை ஏற்கனவே நன்கு தெரியும் என்றும் தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட வந்துள்ளார் என ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கை ஏற்கனவே ஷங்கர் இயக்க இருந்த நிலையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் இந்த அறிவிப்பால் சினிமா வட்டாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

Trending News