சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கம்பை ஊனிகொண்டு கடை திறக்க வந்த யாஷிகா.. விபத்துக்குப் பின் வைரலாகும் புகைப்படங்கள்

யாஷிகா ஆனந்த் 2017 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். அதன் பின்பு விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக பங்கு பெற்றார். யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.

யாஷிகா ஆனந்த் கடமையை செய், உத்தமன், ராஜபீமா, பாம்பாட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்துக்கொண்டு மிகவும் பிஸியாக இருந்தார். இவர் கடந்த ஜூலை மாதம் தன் நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்றுவிட்டு சென்னை திரும்பும் பொழுது மாமல்லபுரம் அருகிலுள்ள
சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திலேயே யாஷிகாவின் தோழி ஒருவர் இறந்துவிட்டார். யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை நடத்தப்பட்டது. யாஷிகா ஆனந்த் நான்கு மாத சிகிச்சைக்குப் பிறகு தற்போது உடல்நலம் முழுமையாக குணம் பெற்றுள்ளார்.

yashika anand
yashika anand

யாஷிகா ஆனந்த் விபத்திற்குப் பிறகு முதல் முறையாக கம்பை ஊனிகொண்டு கடை திறப்பு விழாவிற்கு வந்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு யாஷிகா வாக்கிங் ஸ்டிக்கை பிடித்தபடி வந்துள்ளார். யாஷிகா மீண்டும் கம்பேக் கொடுத்ததால் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

yashika anand
yashika anand

யாஷிகா இந்நிகழ்ச்சிக்கு சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் என்னை சுற்றி எரிந்த நெருப்பை விட எனக்குள் எரிந்த நெருப்பு மிகவும் பிரகாசமாக இருந்ததால் நான் உயிர் பிழைத்தேன் என பதிவிட்டிருந்தார். இதனால் யாஷிகா இனி திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

yashika-anand-gohair
yashika-anand-gohair

Trending News