வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஆபாசமாக சித்தரித்து புகைப்படம்.. ராஜா ராணி 2 நடிகையின் பகீர் குற்றச்சாட்டு!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் சந்தியா மற்றும் சரவணன் இருவருக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளை ரசிப்பதற்கு என்றே சின்னத்திரை ரசிகர்கள் இந்த சீரியலை அனுதினமும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சீரியலில் கதாநாயகியாக சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியா மானசாவும், கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் சிந்தும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். ராஜா ராணி2 சீரியல் ஹிந்தியில் ‘என் கணவன் என் தோழன்’ என்ற தலைப்பில் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், ஏற்கனவே தெரிந்த கதை என்றாலும் தமிழ் நடிகர் நடிகைகளை வைத்து ராதா ராணி2 சீரியல் அருமையாக கொண்டு செல்கின்றன.

ஏனென்றால் இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்த கேரக்டருக்கு ஏற்ப கச்சிதமாக பொருந்தி உள்ளனர். அந்தவகையில் சந்தியாவின் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் மலையாள நடிகை பிரவீணா ராஜா ராணி2 சீரியலில் தன்னுடைய அட்டகாசம் நடிப்பை வெளிக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

எனவே பிரவீனா தற்போது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் பிரவீணாவின் புகைப்படத்தை வைத்து ஆபாசமாக சித்தரித்து சோஷியல் மீடியாவில் மர்ம நபர்கள் உலாவ விடுகின்றனர் என்று அந்த புகாரில் பிரவீனா கொடுத்து குறிப்பிட்டுள்ளார்.

நடிகை பிரவீணா மலையாளத்தில் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் தமிழ் சினிமாவிலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஏராளமான படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பிரவீணா போலீசாரிடம் கொடுக்கப்பட்ட புகார் குறித்து சோஷியல் மீடியாவில் தப்போது அவருடைய ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Trending News