திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

காட்டிய கவர்ச்சிக்கு வாய்ப்பு வந்துருச்சு.. முன்னணி நடிகரை கவர்ந்த ரம்யா பாண்டியன்

ஒத்த இடுப்பு போட்டோ மூலம் மொத்த சினிமா உலகத்தையும் கவர்ந்தவர் தான் நம்ம ரம்யா பாண்டியன். சும்மா சொல்லக்கூடாது அவர் வெளியிட்ட அந்த புகைப்படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய அனைத்து இளம் ரசிகர்களையும் கவர்ந்தது. குறிப்பாக சினிமா வட்டாரங்களில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

அதன்பிறகு விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் பிக் பாஸுக்கு சென்ற அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று பார்த்தால் அதற்கு நேரெதிராக நிறைய நெகடிவ் விமர்சனங்கள் வந்தன. இருந்தாலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு அவருக்கு படவாய்ப்புகளும் கணிசமாக வரத் தொடங்கின.

சூர்யா தயாரிப்பில் சமீபத்தில் அமேசான் தளத்தில் வெளியாகி ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படம் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் புதிய படம் ஒன்றில் ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அவரை தன்னுடைய சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது கேரளா சினிமா வட்டாரம்.

ramya-pandiyan
ramya-pandiyan

இனி தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அதிக கவனம் செலுத்த உள்ளாராம் ரம்யா பாண்டியன். பட வாய்ப்புகள் போக வெப்சீரிஸ் வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்து வருகிறது. கண்டிப்பாக இன்னும் ஒரு சில வருடங்களில் தான் நினைத்த இடத்தை அடைந்து விடுவேன் என மார்தட்டிக் கொள்கிறோம் ரம்யா பாண்டியன்.

Trending News