வியாழக்கிழமை, அக்டோபர் 17, 2024

வலியே இல்லாமல் காவு வாங்கும் மெஷின்.. 30 வினாடிகளில் மரணம்

ஒருவர் எந்த ஒரு மருத்துவம், மூலமாகவும் சரி செய்யப்பட முடியாத ஒரு கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்படுகிறார் என்றால் அவரை அந்தத் துன்பத்திலிருந்து விடுவிக்க மருந்து மூலம் கொலை செய்யும் நடைமுறைக்கு கருணைக் கொலை என்று பெயர்.

ஐரோப்பிய நாட்டில் இந்த கருணைக் கொலை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1,300 பேர் கருணை கொலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

சுவிஸ் நாட்டில் கருணைக்கொலைக்கு பயன்படுத்தப்படும் சர்க்கோ தற்கொலை இயந்திரம் வெற்றிகரமாக தனது ஆய்வை நிறைவேற்றியுள்ளது. வரும் 2022ஆம் ஆண்டு முதல் இது செயல்பட தயாராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த இயந்திரம் நோயாளிகளை, அவர்கள் இறப்பதற்கு முன் ஆழ்ந்த கோமா நிலைக்கு தள்ளிவிடும். இந்த இயந்திரம் முழுவதும் நைட்ரஜனால் நிரப்புவதன் மூலம் அவர்கள் கோமா நிலைக்கு தள்ளப்படுவர். இதன் மூலம் ஆக்சிஜன் அளவு விரைவாக குறைந்து ஹைபோக்சியா மற்றும் ஹைபோகாப்னியா மூலம் உள்ளே இருக்கும் நபரை அது கொல்லும்.

இது எந்த ஒரு மருந்தும் இல்லாமல் விரைவான மற்றும் அமைதியான மரணம் என்று கூறப்படுகிறது. கருணை கொலைக்கு செல்லும் நபர் இறப்பதற்கு முன் சிறிது மகிழ்ச்சியை அவர்களால் உணர முடியும். இந்த முறையின் மூலம் 30 வினாடிகளில் மரணம் ஏற்படும்.

மேலும் அவர்கள் எந்த பீதியும், மூச்சுத் திணறலும் அடைய தேவையில்லை என்று இதை உருவாக்கிய நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த இயந்திரம் உள்ளே இருந்து இயக்கும்படி பட்டன்கள் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தொடங்கப்பட்ட இதன் ஆய்வு தற்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது. 3 டி முறையில் உருவாக்கப்பட்ட இந்த மெஷின் 2022 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் செயல்பட தயார் நிலையில் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sarco
Sarco
- Advertisement -spot_img

Trending News