சினிமாவில் தயாரிப்பாளர்கள் ஒரு படம் வெற்றி பெற்று போட்ட முதலை விட அதிக வசூலை பெற்று விட்டால் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை இயக்கி லாபம் பார்க்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் தயாரித்த படம் வெற்றி பெற்றபோதும் அடுத்து புதிய படங்கள் எதையும் தயாரிக்காத மூன்று தயாரிப்பாளர்கள் பற்றி தான் பார்க்க போகிறோம்.
அந்த தயாரிப்பாளர்கள் வேறு யாருமல்ல விஜய் நடித்த மெர்சல், பிகில், மாஸ்டர் போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் தான். இந்த மூன்று படங்களுமே நடிகர் விஜய்க்கு வெற்றி படமாக அமைந்ததோடு அவருக்கு நல்ல பெயரையும் பெற்று தந்தது. படங்களும் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது. ஆனால் இந்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் அதன் பின்னர் வேறு எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.
கடந்த 2017ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தை தேனான்டாள் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் நல்ல வசூலை பெற்றபோதும் தயாரிப்பாளர் அடுத்த படத்தை தயாரிக்கவில்லை. காரணம் மெர்சல் படத்திற்கு முன்பு தேனான்டாள் பிலிம்ஸ் தயாரித்து பல படங்களால் நஷ்டம் ஏற்பட்டது தானாம்.
அதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படமும் நல்ல வசூலை பெற்ற நிலையில் இதன் தயாரிப்பாளர் புதிதாக படங்களை தயாரிக்கவில்லை. விசாரித்தபோது சரியான கதை அமையவில்லை என கூறியுள்ளனர்.
இவர்களை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். இவரும் இப்படத்திற்கு பின்னர் வேறு எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. காரணம் படம் தயாரிப்பது இவரின் பணி அல்ல எப்போதாவது நல்ல கதைகள் கிடைத்தால் தயாரிப்பாராம்.
ஹிட் படங்களை தயாரித்த போதும் அடுத்தடுத்து விஜய் பட தயாரிப்பாளர்கள் புதிய படங்களை தயாரிக்காமல் இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சற்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.