வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ஒரு மாத கைக்குழந்தையுடன் சூட்டிங் வந்த வெண்பா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகைகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக ரேட்டிங் பெற்று முன்னணியில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மாவுக்கு இணையாக நடிப்பில் கலக்கி வருபவர் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பரீனா.

இவர் சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுக்கு அறிவித்தார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய கர்ப்ப கால போட்டோக்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வந்தார். வயிற்றில் குழந்தையுடன் அவர் யோகா செய்வது, டான்ஸ் ஆடுவது போன்ற பல வீடியோக்கள் மீடியாவில் வைரலாகி வந்தது.

இந்நிலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. இந்த செய்தியை அவருடைய கணவர் சோசியல் மீடியாவில் தெரிவித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களையும், குழந்தைக்கு ஆசிகளையும் தெரிவித்தனர்.

அதன்பிறகு பரீனா தொடர்ந்து சீரியலில் நடிப்பாரா, நடிக்க மாட்டாரா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு இருந்தது. அதை தெளிவு படுத்தும் விதமாக சிறிது ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் சீரியலுக்கு வந்து விடுவேன் என்று பரீனா தெரிவித்திருந்தார்.

தற்போது புது உற்சாகத்துடன் அவர் சீரியலுக்கு திரும்பியுள்ளார். பரீனா தன் குழந்தையுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போன்ற போட்டோ தற்போது மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் பரீனா தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு பெண் ஒருவர் மேக்கப் செய்து கொண்டுள்ளார். இந்த போட்டோ தற்போது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கைக்குழந்தையுடன் இருக்கும் நிலையிலும் அவரின் நடிப்புக்கான இந்த அர்ப்பணிப்பு பலரையும் வியக்க வைத்துள்ளது.

திரைத்துறையில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் தற்போது பெண்கள் அனைத்து தடைகளையும் கடந்து முன்னேறி வருகின்றனர். அந்த பெண்களுக்கு ஊக்கம் தரும் வகையில் இந்த போட்டோ இருப்பதாக பலரும் பரீனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

farina
farina

Trending News