வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

குழந்தையை வைத்து வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்திய வெண்பா.. செம க்யூட்டான புகைப்படங்கள்

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகன் கதாநாயகியை விட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது வெண்பா என்ற வில்லி கதாபாத்திரம். இதில் தொகுப்பாளினி ஃபரீனா தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆரம்ப காலகட்டத்தில் சமையல் உட்பட ஒரு சில பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கிய ஃபரீனா தற்போது சின்னத்திரையில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அத்துடன் இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது கூட சீரியலில் இருந்து விலகாமல் தன்னுடைய முழு பங்களிப்பை பாரதிகண்ணம்மா சீரியலில் கொடுத்திருந்தார். அதன் பிறகு சுகப்பிரசவத்தில் ஃபரீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

பின்பு ஒரு மாதம் குழந்தையுடன் மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கத் தொடங்கி விட்டார். மேலும் ஃபரீனாவின் ஒரு மாத குழந்தைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமிய முறைப்படி Zayn Lara Rahman (ஜைன் லாரா ரஹ்மான்) என்ற பெயர் சூட்டப்பட்டது.

farina-baby-cinemapettai
farina-baby-cinemapettai

இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலம் ஆரி அர்ஜுனன் உட்பட சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

farinna-baby1-cinemapettai
farinna-baby1-cinemapettai

தற்போது ஃபரீனாவின் குழந்தைக்கு விதவிதமான போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் சின்னத்திரை ரசிகர்களிடையே எக்கச்சக்கமான லைக்குகளை பெற்றுள்ளது.

farina-baby2-cinemapettai
farina-baby2-cinemapettai

Trending News