வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பிரபல காமெடியனுக்கு ஜோடியான லட்சுமி மேனன்.. உங்க நிலைமை இப்படி ஆயிடுச்சே

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான நடிகை லட்சுமி மேனன் தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, கொம்பன், பாண்டியநாடு போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். ஆனால் மிக சீக்கிரமே இவருக்கு மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது.

ஒரு கட்டத்தில் சுத்தமாக பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்த நிலையில் தான் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிக்குத்தி பாண்டி படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள யங் மங் சங் படமும் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் லட்சுமி மேனன் அறிமுக இயக்குனர் முருகேஸ் பூபதி என்பவர் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் ஹீரோவாக பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடிக்க உள்ளாராம். தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக வலம் வரும் யோகி பாபு அவ்வபோது மண்டேலா போன்ற படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது எமோஷன், காதல், காமெடி ஆகிய மூன்றும் கலந்த இந்த படத்தில் யோகி பாபுவும், லட்சமி மேனனும் காதலர்களாக நடிக்க உள்ளார்களாம். மேலும் இப்படம் வழக்கத்தில் இருந்து ஒரு மாறுபட்ட காதல் கதையாக உருவாகிறதாம்.

ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா உடன் டூயட் பாடிய யோகி பாபு தான் லட்சுமி மேனன் உடன் டூயட் பாட உள்ளார். முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடி வந்த லட்சுமி மேனன் தற்போது காமெடி நடிகர் யோகி பாபுவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளது கோலிவுட்டில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் யோகி பாபு ஒன்றும் சளைத்தவர் கிடையாது. அவரும் ஹீரோக்களுக்கு இணையானவர் தான். அந்த வகையில் நிச்சயம் இப்படம் இருவருக்குமே ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News