வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

3 மணி நேரத்திற்கு 9 கோடி செலவு செய்த ராஜமௌலி.. ஆச்சரியத்தில் வாயை பிளக்கும் திரை உலகம்

தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள திரைப்படம் ஆர்ஆர்ஆர். இத்திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படம் வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது. படம் வெளிவருவதற்கு முன்பே போஸ்டர்கள், டீசர் எல்லாம் வெளியாகி  ஏகப்பட்ட எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் இப்படத்தின் பிரமோஷன் வேலைகள் அனைத்தும் படு ஜோராக நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காக தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்விற்கு மற்றொரு சிறப்பாக அமைந்தது நடிகர் சல்மான்கான் என்ட்ரி.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவர் ஜூனியர் என்டிஆர் நடிப்பையும், ராம்சரண் ஒரு கடின உழைப்பாளி என்றும் பாராட்டினார். இந்த ஆர்ஆர்ஆர் படத்தை தான் மிகவும் எதிர்பார்ப்பதாகவும், இப்படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் ஒரு இடத்தை பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் 3000 ரசிகர்கள் கலந்து கொள்ளும் அளவுக்கு மிகப்பெரிய அரங்கத்தை தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அவர் 9 கோடி செலவு செய்துள்ளார். ஒரு திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்காக தயாரிப்பாளர் இவ்வளவு கோடி செலவு செய்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

3 முதல் 4 மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்காக 9 கோடியா என்பது போன்று சினிமா உலகம் வாயை பிளந்து ஆச்சரியத்தில் பார்க்கின்றனர். ஏற்கனவே ஆர் ஆர் ஆர் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக பல கோடி பொருட் செலவில் எடுக்கப்பட்டது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தயாரிப்பாளர் பணத்தை பற்றி கவலைப்படாமல் தாராளமாக செலவு செய்துள்ளார்.

போட்ட பணத்தை விட எப்படியும் அதிக மடங்கு லாபம் பார்த்து விடலாம் என்பதே அவரின் நோக்கம் ஆகும். அந்த அளவுக்கு திரைப்படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி விரைவில் முன்னணி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது.

Trending News