மலையாளத்தில் 2015 வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய்பல்லவி. பிரேமம் படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் மலையாளத்தை தாண்டி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. சாய் பல்லவி தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் தனுஷின் மாரி 2 மூலம் மிகவும் பிரபலமானார்.
இவர் தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக உள்ளார். நடிப்பு, நடனம் என அனைத்திலும் மிகச் சிறந்து விளங்கும் சாய்பல்லவி தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
சாய் பல்லவி மிடில் கிளாஸ் அப்பாயி வெற்றியை தொடர்ந்து நானி உடன் இணைந்து நடித்துள்ள ஷியாம் சிங்கா ராய் விரைவில் வெளியாக உள்ளது . இதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. இப்படம் நிகழ்காலம் மற்றும பூர்வ ஜென்மம் என இருவேறு கதைகளின் அடிப்படையில் ஷியாம் சிங்கா ராய் உருவாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் சாய் பல்லவியின் வரவேற்பை தொடர்ந்து நடிப்பில் ராணாவுடன் விராடபருவம், நாகசைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. தற்போது பவன் கல்யாணுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது தவிர சாய் பல்லவி நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் கலக்கி வரும் சாய்பல்லவி பாலிவுட்டிலும் நடிக்க தயார் என கூறியுள்ளார். கதை நன்றாக இருக்க வேண்டும், அதுவும் தனக்கு ஏற்றதாக இருந்தால் கண்டிப்பாக பாலிவுட்டில் அறிமுகமாக தயாராக உள்ளேன் என சாய்பல்லவி கூறியுள்ளார்.