தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதுவும் கார்த்தியுடன் சேர்ந்து நடித்த சுல்தான் திரைப்படம் பெரிய அளவு வரவேற்பு கிடைத்தது.
அதனால் தற்போது தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவிற்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் வித்தியாசமான கதையில் நடிப்பதற்கு ஆர்வம் இருப்பதால் பல இயக்குனர்களிடம் வித்தியாசமான கதை இருந்தால் கூறுங்கள் நடிக்கிறேன் என கூறி வருவதாக பலரும் கூறி வருகின்றனர்.
எல்லா நடிகைகளுக்கும் ஆரம்பத்தில் ஹீரோவுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். ஆனால் காலப்போக்கில் அது அப்படியே மாறி கதைக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அதற்கு காரணம் கதாநாயகியாக நடித்ததை விட கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்தால் இவருக்கென தனி ரசிகர்கள் உருவாவார்கள்.
இதனால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் அதற்காகத்தான் பல கதாநாயகிகளும் வித்தியாசமான கதைகளில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். ராஷ்மிகா மந்தனா சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். மேலும் ரசிகர்களுக்கு கேட்கக்கூடிய கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிப்பதில் வல்லவர் என்பது அவர் பதில் அளிக்கும் விதத்திலேயே தெரிந்துவிடும் அந்த அளவிற்கு சாமர்த்தியமாக பதில் அளிப்பார்.
தற்போது ராஷ்மிகா மந்தனா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குட்டி உடையில் ராஷ்மி வந்தனாவை பார்த்த ரசிகர்கள் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.