வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஆர் ஆர் ஆர் வெளியீட்டில் ஏற்பட்ட சிக்கல்.. தவிக்கும் ராஜமௌலி

இந்திய சினிமாவே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஆர்ஆர்ஆர். ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் தெலுங்கு முன்னணி நட்சத்திரங்களான ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகள் அனைத்தும் படு ஜோராக நடந்து வருகிறது. உலக அளவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள், டீசர்கள் அனைத்தும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. மேலும் இப்படம் பல கோடி செலவு செய்து விளம்பரப்படுத்தப்பட்டது. இப்படம் வெற்றியடைய பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது படத்திற்கு ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாக கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களிலும் ஊரடங்கை பிறப்பிக்கும் நிலையில் இருக்கிறது. அதிலும் மும்பையில் விரைவாக ஊரடங்கு அமல்படுத்த இருக்கிறது.

மேலும் ஹைதராபாத்தின் மாவட்ட ஆட்சியர் அங்கு உள்ள தியேட்டர்களை பார்வையிட்டு வருகிறார். அதில் பல தியேட்டர்கள் சுத்தமாக இல்லாத காரணத்தால் சுமார் 170 க்கும் மேற்பட்ட தியேட்டர்களுக்கு அரசு சீல் வைத்துள்ளது.

கொரோனா அதிகரிப்பு காரணமாக அனைத்து மாநிலங்களின் தியேட்டர்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதை மீறும் தியேட்டர்களுக்கு சீல் வைத்து மூடப்பட்டும் வருகிறது. இதனால் தற்போது ஆர் ஆர் ஆர் திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்று படக்குழுவினர் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். இந்த செய்தியால் படத்தை மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News