வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

முல்லையை நச்சரித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. அதை காட்டி உருக வைத்த கதிர்!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கயலின் காதுகுத்து விழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னிலையில் கயலுக்கு மாமாவாக தனத்தின் அண்ணன் தான் சீர்வரிசை செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

அதற்காக தனத்தின் அண்ணன் ஜெகா 21 சீர்வரிசை தட்டுகள் வாங்கி வந்த பிறகும், மீனாவின் அப்பா அவரை தாய் மாமாவாக முறை செய்யவிடாமல் தன்னுடைய அண்ணன் மகனை சிங்கப்பூரிலிருந்து வரவைத்து அவரை தாய் மாமாவாக அமரவைத்து கயலுக்கு காதுகுத்து நடத்தினர். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு சகஜ நிலைக்கு வந்த பிறகு, அங்குள்ள பெரும்பாலானோர் முல்லை  இடம், ‘நீ எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறாய்?’ என்று தொடர்ந்து நச்சரித்தனர். இதனால் மனம் உடைந்த முல்லையை கதிர் சமாதானப்படுத்தினார். அத்துடன் யாருக்கும் தெரியாமல் காதுகுத்து விழாவில் இருந்து கிளம்பிய முல்லை மற்றும் கதிர் இருவரும், தனியே சென்று முல்லைக்கு கதிர் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, செம க்யூட்டான ரொமான்ஸ் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் காட்டப்பட உள்ளது.

மேலும் முல்லைக்கும் வீட்டில் கயல் பாப்பா மற்றும் பாண்டியன் ஒன்றை இரு குழந்தைகள் இருப்பதால் அவருக்கும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வம் வந்துவிட்டது. இருப்பினும் முல்லையின் ஆசை நிறைவேறாத ஆசையாக மாறி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தொடர்ந்து முல்லைக்கு எப்போது குழந்தை பிறக்கும் என தொடர்ந்து கேள்வி கேட்கப்படுவதால் ரசிகர்களும் அதற்கான பதில் எப்போது கிடைக்கும் என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். அத்துடன் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் இருக்கும் மருமகள்கள் நைட்டி அணியாமல் சேலை கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால் தற்போது ஐஸ்வர்யா மட்டும் நைட்டி போடுவது மீனாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் தனம் அதற்கு ஒத்துக் கொண்டது இனிவரும் நாட்களில் புதுப் பிரச்சினை கிளம்பப் போகிறது. அதை எப்படி தனம் சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News