வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பட வாய்ப்புக்காக இந்த கண்றாவி பண்ண சொன்னாங்க.. பகிர் கிளப்பிய யாஷிகா

சமீபகாலமாக சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் தங்களுக்கு நடக்கும் பா**யல் தொல்லைகளை பற்றி தைரியமாக பேச தொடங்கியுள்ளார்கள். அந்தவகையில் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் மனம் திறந்து பேசியுள்ளார்.

யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் யாஷிகா மிகவும் பிரபலமானார். இதைதொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.

இவர் கைவசம் சல்பர், எஸ்ஜே சூர்யாவின் கடமையை செய், மகத்தின் இவன் தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீமா உள்பட ஏராளமான படங்கள் உள்ளது. இவ்வளவு பிஸியாக இருந்த யாஷிகா கடந்த வருடம் ஜூலை மாதம் எதிர்பாராத வகையில் கார் விபத்தில் சிக்கிக்கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவரது தோழி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், சுமார் 4 மாதமாக படுத்தபடுக்கையாக இருந்த யாஷிகா, தற்போது எழுந்து நடக்கும் அளவுக்கு குணமாகி உள்ளார். இந்நிலையில் யாஷிகா மீண்டும் கமிட்டான படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா ஆரம்ப காலங்களில் சினிமா வாய்ப்புக்காக பல இடங்களை நாடியுள்ளார். அங்கு பலரும் இவருக்கு பா**யல் ரீதியான தொல்லை தந்துள்ளதாக பகீர் தகவலை கூறியுள்ளார். இதனால் அந்த பட வாய்ப்பை வேண்டாம் என அங்கிருந்து கிளம்பிவிட்டார். இப்பொழுதும் சினிமாத்துறையில் இதுபோன்ற பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று யாஷிகா கூறி உள்ளார்.

இதேபோல் நடிகை ரெஜினா கசாண்ட்ரா சினிமாவுக்கு வந்த புதிதில் என்னிடம் ஒருவர் போன் செய்து அட்ஜஸ்ட் செய்வீர்களா என்று கேட்டார் என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் இது சினிமா துறையில் மட்டுமல்லாமல் எல்லா துறையில் உள்ள பெண்களுக்கும் இது போன்ற பிரச்சினைகள் உள்ளது என குறிப்பிட்டிருந்தார். இதுபோல் அடுத்தடுத்த நடிகைகள் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை தைரியமாக வெளியே சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

Trending News