காபி வித் டிடி மூலம் பிரபலமான திவ்யதர்ஷினி. அதன்பிறகு ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக கருதப்படும் திவ்யதர்ஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் தற்போது வரை ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
தனது கலகலப்பான பேச்சும் நக்கலான சிரிப்பும் தான் நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்வதற்கு உறுதுணையாக இருந்தது. ஆனால் சில வருடமாக திவ்யதர்ஷினி பெரிய அளவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை அதற்கு காரணம் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களும் திரைத்துறையில் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகள் தான் எனக் கூறுகின்றனர்.
ஆனால் விஜய் டிவியில் முக்கியமான பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினி தான் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் ஆர்ஆர்ஆர் பட புரமோஷனுக்காக ராஜமௌலி ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் வைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சமீபகாலமாக திவ்யதர்ஷினி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியூர் செல்லும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து ஒரு சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியபடுத்துகிறார். ஆனால் தற்போது தனக்கு கீல்வாதம் ஏற்பட்டுள்ளதால் தன்னால் நடக்க முடியவில்லை அதனால்தான் வீல்சேரில் செல்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
முதலில் இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திவ்யதர்ஷினி கீழே விழுந்ததாகவும் அவருக்கு தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டதாகவும் நினைத்தனர். ஆனால் இப்புகைப்படம் 3 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் தற்போது தனக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என பதிவிட்டுள்ளார். இதனால் தற்போது திவ்யதர்ஷினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ரசிகர் பட்டாளத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் கூட ஆர்ஆர்ஆர் ராஜமவுலி படத்தின் புரமோஷனுக்காக விஜய் டிவியில் தரிசனம் கொடுத்தார் திவ்யதர்ஷினி. இனிவரும் காலங்களில் விரைவில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.