வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

யாஷிகாவின் அம்மாவையே படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.. நிலைமையை பார்த்தீர்களா!

தமிழ் மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகிலும் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை என்பது இருந்து கொண்டு தான் உள்ளது. ஒரு பெண் திரையுலகில் வாய்ப்பு கேட்டு வரும்போது வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு பல பிரச்சனைகளை சந்திக்கிறார். தற்போது டாப் நாயகிகளாக வலம் வரும் பலரும் ஆரம்பகாலத்தில் இதை கடந்து தான் வந்திருப்பார்கள்.

அந்த வகையில் இளம் நடிகை ஒருவர் திரையுலகில் அவர் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல நடிகை யாஷிகா ஆனந்த் தான். தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டுக்குத்து போன்ற படங்களில் நடித்திருப்பவர் தான் யாஷிகா ஆனந்த்.

ஆனால் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த நிலையில் திடீரென நடந்த கார் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார்.

பல மாதங்கள் நடக்க முடியாமல் படுக்கையிலேயே வாழ்க்கையை கழித்த யாஷிகா தற்போது தான் குணமடைந்து மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். விபத்து காரணமாக கைவசம் இருந்த பட வாய்ப்புகள் அனைத்தும் கைநழுவி சென்றதால் தற்போது யாஷிகா பட வாய்ப்புகளுக்காக இயக்குனர்களை சந்தித்து கதை கேட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற யாஷிகா சினிமாவில் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “எனது ஆரம்பக்கால சினிமா வாழ்க்கையில், நான் வாய்ப்பு தேடும்போது, பல இயக்குனர்கள் தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டார்கள். இன்னும் சில இயக்குனர்கள் தவறான காட்சிகளை நடித்து காட்டுமாறு கேட்டார்கள்.

ஆனால், நான் அதையெல்லாம் ஒப்புக்கொள்ளாமல் அங்கிருந்து உடனடியாக கிளம்பிவிடுவேன்” என கூறியுள்ளார். மேலும் யாஷிகா மட்டுமல்லாமல் அவரது அம்மாவையும் தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி யாஷிகா ஆனந்த் தனக்கு தொல்லை அளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பெயரை குறிப்பிடவில்லை. நடிகை மற்றும் அவரது அம்மாவிற்கு நேர்ந்த இந்த சம்பவங்கள் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending News