ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அன்பறிவு படத்தை கிழித்து தொங்க விட்ட ப்ளூ சட்டை மாறன்.. இது என்ன ஹிப்ஹாப்புக்கு வந்த சோதனை

தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களை யூடியூப் இன் மூலம் கேலியாகவும், கிண்டலாகவும் விமர்சனம் செய்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித், சூர்யா என பாரபட்சம் பார்க்காமல் எல்லா படங்களையும் கேலி கிண்டல் செய்து வந்தார்.

ஒரே சட்டையை போட்டுக்கொண்டு படங்களை விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறனின் யூடியூப் சேனலில் 13 லட்சத்திற்கு மேல் சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். அதனால் இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவரது யூடியூப் சேனலுக்கு கண்டனம் தெரிவித்து வந்தார்கள்.

மாறன் ஒரு படத்தை இயக்கினால் அதில் ஏற்படும் கஷ்டத்தை அவரால் உணர முடியும் என பலரும் கூறிவந்தனர். இதனால் ப்ளூ சட்டை மாறன் ஆன்டி இந்தியன் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் மாறன் ஹீரோவாக பாட்ஷா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தின் பணிகள் நிறைவடைந்த பிறகு சென்சாருக்கு அனுப்பப்பட்டது. ஆன்டி இந்தியன் படம் திடீரென்று சென்சார் போர்டால் தடை விதிக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைக்கு பிறகு ஆன்டி இந்தியன் படம் வெளியானது. இப்படம் மிகவும் சுமாராக உள்ளது என பலரும் விமர்சித்து வந்தார்கள்.

இதனால் ப்ளூ சட்டை மாறன் இனி படங்களை விமர்சிக்க கூடாது என பலரும் பிரச்சினை செய்து வந்தார்கள். ஆனால் மாறன் அவருடைய படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் தற்போது வரும் படங்களையும் கிண்டல் செய்து விமர்சித்து வருகிறார்.

அஸ்வின் ராம் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, காஷ்மிரா, ஷிவாத்மிகா ஆகியோர் நடிப்பில் நேற்று ஓடிடியில் வெளியான படம் அன்பறிவு. இப்படத்தை மாறன் குடுமி வைத்த அண்ணன், கூலிங் கிளாஸ் போட்ட தம்பி என ஆரம்பித்து படத்தை கிழி கிழி என்று கிழித்து தொங்க விட்டுள்ளார். நீங்கள் தடை போட்டால் எனக்கென்ன, தலைகீழ் நின்னால் எனக்கென்ன என்று மனிதன் கவலைப்படாமல் படங்களை தாறுமாறாக கிழித்து தொங்க விடுகிறார்.

Trending News