வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அந்த விஷயத்தில் ரம்பாவை தூக்கி சாப்பிட்ட ஐஸ்வர்யா தத்தா.. படுமோசமாக வெளிவந்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் பாயும் புலி, சத்ரியன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படங்களில் நடித்து ஓரளவுக்கு பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன்பிறகு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட அவர், அங்கு தன் மோசமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார். இருந்தாலும் இறுதிப்போட்டி வரை சென்று ரன்னராக தேர்வானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு தமிழில் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தது.

தற்போது ஐஸ்வர்யா பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரியுடன் இணைந்து அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது விதவிதமான கிளாமர் உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்துவார்.

அப்படி எடுக்கும் கவர்ச்சி புகைப்படங்களை அவர் தன்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும். அந்த வகையில் இவர் தற்போது ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

அந்த போட்டோவில் அவர் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான கவர்ச்சியை காட்டி உள்ளார். கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையை அணிந்திருக்கும் அவர் எக்குத்தப்பாக அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார்.

iswarya1 (3) (1)
iswarya1 (3) (1)

பாதிக்கு மேல் உடலை திறந்து காட்டியபடி இருக்கும் அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஐஸ்வர்யாவை கண்டபடி திட்டி தீர்க்கின்றனர். மேலும் பட வாய்ப்புக்காக இவ்வளவு கேவலமாகவா உடை அணிவது, முதலில் இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்குங்கள் என்று கூறி வருகின்றனர். ஐஸ்வர்யாவின் இந்த கவர்ச்சி புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.

Trending News