வாழ்க்கையில் ஜெயித்து விட்டு பேசினால் தான் காது கொடுத்து கேட்பார்கள் என்று கூறுவார்கள். அது உண்மைதான் ஆனால் ஜெயிப்பதற்கு முன்பே ஆணவத்தில் பேசுவது யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்வது போல. அப்படி தன் வாயால் தானே தன் படத்திற்கு ஆப்பு வைத்து கொண்டவர் தான் நடிகர் அஷ்வின்.
அஷ்வின் என்ன தான் ஏற்கனவே படங்களில் நடித்திருந்தாலும் ஒரு ஹீரோவாக அவருக்கு என்ன சொல்ல போகிறாய் படம் தான் முதல் படம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சுக்கு படமே வெளியாகாது என நினைத்தார்கள். ஆனால் பல போராட்டங்களுக்கு பின்னர் படம் பொங்கல் வெளியீடாக இன்று வெளியாகியுள்ளது.
40 கதை கேட்டு தூங்கிட்டேன் 41வதா இந்த கதை கேட்டு இம்ப்ரஸ் ஆனேன்னு அஷ்வின் சொன்னரே அந்த படத்தோட கதையை பார்க்கலாம். ரேடியோ ஜாக்கியாக வேலை பார்க்கும் அஸ்வினுக்கு அவரின் அப்பா அவந்திகா மிஷ்ராவை பெண் பார்க்கிறார். எழுத்தாளராக பணிபுரியும் அவந்திகா மிஸ்ராவுக்கோ தனது வருங்கால கணவர் குறித்த சில எதிர்பார்ப்புகள் உள்ளது.
அதன்படி தனது கணவர் காதல் தோல்வி அடைந்தவராக இருக்க வேண்டும் என அவந்திகா எண்ணுகிறார். அதனால் அஸ்வின் தனக்கு காதல் கதை இருப்பதாகவும் தனது காதலி தேஜு அஸ்வினி என்றும் பொய் கூறுகிறார். அதை அப்படியே மெயிண்ட்டெயினும் பண்ணுகிறார். ஒரு கட்டத்தில் அஷ்வினுக்கு தேஜூ மீது காதல் வந்து விடுகிறது.
இறுதியில், நாயகன் அஸ்வின் தனக்கு பெண் பார்த்த அவந்திகா மிஷ்ராவை திருமணம் செய்தாரா? காதலிக்க ஆரம்பித்த தேஜு அஸ்வினியை திருமணம் செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. வழக்கமாக பார்த்து பார்த்து பழகிப்போன ஒரு முக்கோண காதல் கதையை தான். படத்தின் இயக்குனர் ஹரிஹரன்.
என்னதான் விமர்சனங்கள் எழுந்தாலும் சிலர் இந்த படம் அஷ்வினுக்கு ஒரு நல்ல ஆரம்பம் என்று தான் கூறுகிறார்கள். காதல் படம் என்பதால் அஷ்வின் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கைகொடுத்த அஸ்வின், புகழ் காம்பினேஷன் இந்த படத்தில் பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகவில்லை என்பதுதான் ரசிகர்களின் மிகப்பெரிய குறையாக உள்ளது.