வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கணிக்கவே முடியாத விஜய் டிவியின் பிக்பாஸ்.. ஆரி, ராஜுவை ஒப்பிட்டுப் வெளிவந்த மெர்சலான அப்டேட்

நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்5 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின்போது டைட்டில் வின்னர் ஆக ராஜு தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்னைய சீசனான பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக தேர்வான ஆரி அர்ஜுனனை வைத்து சோஷியல் மீடியாவில் பிக்பாஸ் ரசிகர்கள் ராஜுவை ஒப்பிட்டுப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால் கடந்த சீசனில் பங்கேற்ற ஆரி, கடுமையாகப் போராடி பல்வேறு தடைகள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். ஆனால் ராஜு மக்களை என்டர்டைன்மென்ட் செய்தும் மிமிக்ரி, ஜோக், கவுண்டர் போட்டும் ஈஸியாக டைட்டில் அடித்துவிட்டார் என்ற கருத்து நிலவுகிறது.

எனவே கடைசியாக நடந்து முடிந்த இந்த இரண்டு சீசன்களில் இவ்வளவு வித்தியாசமா என்றும் ரசிகர்களுக்கு எண்ணம் எழுந்துள்ளது. அத்துடன் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் எந்த போட்டியாளர்களின் உந்துதலும் இல்லாமல், தன்னுடைய முயற்சியால் மட்டுமே ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஆரிக்கும், ராஜுவிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

குறிப்பாக ராஜு அமைதியாக இருந்து தன்னுடைய காரியத்தை சாதித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் ஆரி, கடந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆவதற்கு படாதபாடு பட்டார். ஏன் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரையும் பகைத்துக்கொண்டு தனியாளாக போராடினார்.

ஆனால் ராஜுக்கு அப்படியல்ல. அண்ணாச்சி உள்ளிட்டோரின் நட்பும் ஆதரவான பேச்சுகளும் பிக்பாஸ் வீட்டில் கிடைத்தது. நடந்து முடிந்த மற்ற சீசன்களில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஏதாவது ஒரு தரமான நிகழ்ந்துள்ளது. ஆனால் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் அப்படி எந்த சம்பவமும் அரங்கேறிவில்லை.

அதற்காக பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியை சுவாரசியம் இல்லாத சீசன் என்று சொல்லிவிட முடியாது. எனவே ராஜு போராடி பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகவில்லை அவருடைய பெருமைக்காக மட்டுமே கிடைத்திருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Trending News