வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்.. போற போக்க பார்த்தா தமிழ் சினிமாவுக்கு பாய் சொல்லிடுவார் போலயே

இப்போலாம் தமிழ் நடிகர்கள் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர் தற்போது நேரடி தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றனர். ஆனால் இவர்களில் தனுஷ் கொஞ்சம் அதிகமான தெலுங்கு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ஏற்கனவே தனுஷ் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் இரண்டாவதாக இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். வாத்தி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் மூன்றாவதாக ஒரு நேரடி தெலுங்கு படத்தில் தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளாராம். அதன்படி புஷ்பா படம் மூலம் பிரபலமான இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூலிலும் புதிய சாதனை படைத்து அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில் சுகுமாருடன் தனுஷ் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக புஷ்பா படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது புஷ்பா பட இயக்குனரின் புதிய ஸ்கிரிப்ட்டில் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார். புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்த பின்னர் தனுஷ் பட வேலைகளில் சுகுமார் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து மூன்று தெலுங்கு படங்களில் தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளதால் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போற போக்க பார்த்தா தமிழுக்கு டாடா காட்டிடுவாரு போலயே.

Trending News