வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கார்த்திக் உடன் நடிக்க மறுத்த 3 நடிகைகள்.. 4வது ஆக ஷங்கர் மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்

அண்மையில் கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலில் வேட்டையாடியது. தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்துள்ளார். பருத்திவீரன் கெட்டப்பில் கார்த்தி இருக்கும் விருமன் படம் மதுரை சுற்றுவட்டாரத்தில் எடுக்கப்பட்டது.

இப்படத்தில் கார்த்தி ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். முதல்முறையாக கோலிவுட்டில் அறிமுகமாகும் அதிதி விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விருமன் படத்தில் அதிதி ஷங்கருக்கு முன்னதாக 3 நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது. கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்தபோது கால்ஷீட் பிரச்சினையால் இவர்களால் நடிக்க முடியவில்லை. ராஷ்மிகா மந்தானா முன்னதாக கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து அந்த வாய்ப்பு ஷங்கர் மகள் அதிதிக்கு கிடைத்தது. சமீபத்தில் விருமன் படத்தின் இயக்குனர் பேட்டி ஒன்றில் அதிதியின் நடிப்பை பற்றி பாராட்டிப் பேசினார். மேலும் கார்த்தி, அதிதி ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படத்தில் அதிதி துணிச்சலான மதுரை பெண்ணாக தாவணி பாவாடை உடையில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே அதிதிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளார்கள். அத்துடன் விருமன் படத்தில் கார்த்தி, அதிதி இடையேயான கெமிஸ்ட்ரி பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள்.

விருமன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.இதனால் இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தியின் மற்ற படங்கள் போலவே கிராமத்தின் சாயலில் உள்ள விருமன் படமும் ரசிகர்கள் விரும்பும் படி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Trending News