வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பைத்தியமாக மாறி வெண்பா எடுத்த விபரீத முடிவு.. பாரதிகண்ணம்மா சீரியல் விருவிருப்பான கட்டம்!

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலால் பாரதிகண்ணம்மா சீரியலில் கடந்த ஐந்து நாட்களாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எட்டு வருடங்களாக பிரிந்து இருந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்து வாழ்வது போல காண்பித்தனர்.

ஆனால் அது எல்லாம் பாரதி போட்ட ஒரே கண்டிஷனால் தற்போது கனவாகி விட்டது. ஆகவே இந்த சமயத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வெண்பா பக்கா பிளான் செய்கிறார்.

அதாவது பாரதியின் பிரிவைத் தாங்க முடியாமலும், அவர் சரியாக தன்னுடன் பேசாமல் இருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் இதெல்லாம் நாடகம் என்றாலும் முட்டாள் பாரதி இதையெல்லாம் நம்பி வெண்பாவின் பக்கம் சாயத் துவங்குவார்.

அஞ்சலிக்கு தவறான மருந்துகளை பரிந்துரைத்தால் வெண்பாவின் மீது கடும் கோபத்தில் இருக்கும் பாரதி தற்போது கண்ணம்மா தன்னுடைய தவறை ஏற்றுக் கொள்ளாமல் உதறி சென்ற என்ற கோபத்தில் மீண்டும் வெண்பா உடன் சேர்வதற்கு இந்த தற்கொலை முயற்சி சம்பவம் சாதகமாகி விடும்.

எனவே இவ்வளவு நாள் வெண்பாவை டம்மியாக காட்டிக்கொண்டிருந்த சீரியலின் இயக்குனர் அடுத்த வாரம் அவரை வைத்துதான் கதையை ஓட்ட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். எனவே வெண்பா தற்கொலை செய்வது போன்று நடித்து பாரதியை தன்வசம் ஈர்ப்பதற்கு வெண்பாவின் கூட்டாளிகள் சாந்தி மற்றும் மாயாண்டி இருவரும் பக்கா பிளான் போட்டு கொடுத்திருக்கின்றனர்.

ஆகையால் வெண்பா தன்னுடைய வில்லத்தனத்தை பாரதியுடன் இருந்துகொண்டே இனி வரும் நாட்களில் செய்ய மீண்டும் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார். எனவே அவை எல்லாம் நடக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News