வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சமுத்திரகனி கிளப்பிய பஞ்சயாத்து.. தலையில் வைத்து கொண்டாடும் போலீஸ்

சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ரைட்டர் திரைப்படம் ரசிகர்களின் மனதில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. வயது முதிர்ந்த காவல் அதிகாரி தன் வாழ்வில் படும் கஷ்டங்கள் காவல்துறையில் வேலை செய்யும் சக மனிதர்கள் உடன்படும் தொல்லைகள் என சமுத்திரகனி அற்புதமாக நடித்திருப்பார்.

சமுத்திரகனி நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே சமீபகாலமாக சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லக்கூடிய படங்களாக உள்ளன. ஆனால் படங்கள் பெரிய அளவில் வசூல் பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக பெரிய அளவில் வரவேற்பை பெறுகிறது. அதனால் பல இயக்குனர்களும் சமுத்திரக்கனி வைத்து சமுதாய படத்தை இயக்கி வருகின்றனர்.

சமுத்திரக்கனி ரைட்டர் படத்தில் காவல் துறையில் நடக்கும் ஊழல்களை சொல்லியிருப்பார். மேலும் இப்படத்தில் காவல்துறைக்கு ஒரு சங்கம் உருவாக வேண்டும். அதன் மூலம் காவல் துறையில் நடக்கும் ஊழல்களை வெளிக் கொண்டுவரும் என்பது போல் படக்காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

தற்போது தமிழ்நாடு அரசு காவல்துறைக்கு ஒரு தனிப்பட்ட சங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் காவல்துறையினர் தங்களுக்கு நடக்கும் விஷயங்களை சங்கத்தின் மூலம் தெரிவித்து அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளன. இந்த சங்கம் உருவாவதற்கு சமுத்திரக்கனி நடித்த ரைட்டர் படமும் காரணம் என பலரும் கூறி வருகின்றனர்.

ஆனால் ஒரு சில படங்கள் காவல்துறையை பெருமைப்படுத்தும் வகையில் இருந்தாலும் பல படங்கள் காவல் அதிகாரிகள் நடந்துகொள்ளும் விதத்தை வெளிப்படையாகவும் காட்டி விடுகின்றன.

காவல் அதிகாரிகள் அனைவரும் நல்லவர்களும் கிடையாது. இதில் பணியாற்றுபவர்கள் அனைவரும் கெட்டவர்கள் கிடையாது. ஒருசிலர் அதிகாரத்தை வைத்து திமிராக நடந்து கொள்வதால் பல காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுகிறது. அந்த போலீஸ் சங்கம் பிரச்சனையை சரி கட்டவே இந்த படம் வந்துள்ளது.

Trending News