அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் படக்குழுவினர் பிப்ரவரி மாதம் படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் அஜீத் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சி உச்சத்தில் இருக்கும் சமயத்தில் தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இன்னொரு செய்தி கிடைத்துள்ளது.
அஜித் மீண்டும் வினோத் உடன் இணைந்து வித்தியாசமான கதைகளில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இப்படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க உள்ளார். இப்படத்தினைப் பற்றிய தகவல்கள் சமீபகாலமாக சமூக வலை தளங்களில் வெளியாகி வருகின்றன.
மேலும் இப்படத்தில் அஜித்துடன் மலையாள நடிகரான மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. நீண்ட வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் தபு நடிகையும் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தற்போது கைவசம் உள்ளதால் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்கவில்லை என கூறினர். அஜீத்துக்கு அடுத்தப்படியாக இந்த கதாபாத்திரத்திற்கு தான் மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக வினோத் தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு சரியான நடிகர்களை தேர்வு செய்து வருகிறார். ஆனால் தற்போது படக்குழுவினர் படத்தை தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அஜித் நடித்துள்ள புதிய படம் மார்ச் 9 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை கூடிய விரைவில் முடித்து இந்த வருடமே வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதனால் விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர். கண்டிப்பாக இப்படமும் சமுதாய கருத்துகளை மையமாகக் கொண்டு இருக்கும் எனவும் கூறி வருகின்றனர்.