ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற வடிவேலு.. குஷ்பூ சமாதானம் செய்தும் முடியவில்லை

தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இருக்கும் சுந்தர் சி தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தற்போது இவர் ஜீவா மற்றும் ஜெய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

அவரின் திரைப்படத்தில் நகைச்சுவைக்கு முக்கிய இடம் இருக்கும். அந்த வகையில் சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் வெளியான பல திரைப்படங்கள் நகைச்சுவைக்காகவே வெற்றி பெற்றது. அப்படி நகைச்சுவைக்காக ரசிக்கப்பட்ட ஒரு திரைப்படம் தான் மாதவன் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்த ரெண்டு திரைப்படம்.

இந்தப் படத்தில் கரடியுடன் மாட்டிக்கொண்டு வடிவேலு செய்யும் காமெடி அனைவரையும் மிகவும் ரசிக்க வைத்தது. இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் நடிகர் சந்தானமும் இடம் பெற்றிருந்தார். படத்தில் இன்னொரு காமெடியன் இருப்பதை சுந்தர் சி வடிவேலுக்கு கூறாமல் விட்டு விட்டார்.

பின்னர் சந்தானம் நடிப்பதை கேள்விப்பட்ட வடிவேலு தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்று மிகவும் கோபம் அடைந்துள்ளார். இதனால் அந்த படத்தின் பிரிவியூ ஷோவுக்கு வந்த வடிவேலு பாதியிலேயே கிளம்பியுள்ளார். இது சுந்தர் சி உட்பட படக்குழுவினருக்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பலரும் அவரை சமாதானம் செய்ய முயன்றனர் ஆனால் அவர் கேட்கவில்லை. அதன்பிறகு குஷ்பூ வடிவேலுவை சந்தித்து சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனாலும் அவர் இறுதிவரை கோபமாகவே இருந்துள்ளார். பிறகு படம் ஒருவழியாக வெளியாகி வடிவேலுவின் நகைச்சுவை நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த ஒரு காரணத்தினால் சுந்தர் சி மற்றும் வடிவேலு இருவருக்கும் சிறு விரிசல் உருவானது. அதன்பிறகு சுந்தர் சி படங்கள் இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த படங்கள் அனைத்திலுமே விவேக் தான் காமெடியனாக நடித்தார்.

ரெண்டு படம் வெளியாகி நான்கு வருடங்களுக்குப் பின்னர் சுந்தர் சி நகரம் மறுபக்கம் என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தில் சுந்தர் சி, வடிவேலுவை ஒருவழியாக சமாதானப்படுத்தி ஹீரோவுக்கு இணையான காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அந்த நகைச்சுவை பெரும் அளவில் பேசப்பட்டது. அதன் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து என்ற திரைப்படத்திலும் நடிக்கவில்லை.