சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஷாருக்கானை போல் சிக்கிக் கொண்ட ரஜினி.. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ!

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு புகழின் உச்சியில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவ்வளவு பேரும், புகழும் இருந்தும் அவர் தற்போது கடும் துயரத்தில் இருக்கிறார்.

அதற்கு முக்கிய காரணம் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்திதான். ஏற்கனவே அவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி உள்ளார்.

இந்த சம்பவமே ரஜினிக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது. இந்நிலையில் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், தன் கணவர் தனுஷை விவாகரத்து செய்வதாக அறிவித்தது அவருக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை அறிவித்து விட்டு அவர்கள் இருவரும் அவரவர் வேலைகளில் மூழ்கி விட்டனர்.

ஆனால் இந்த செய்தியை கேள்விப்பட்ட ரஜினி ரசிகர்கள் சொல்ல முடியாத வருத்தத்தில் இருக்கின்றனர். திரையில் அனைவரையும் மகிழ்வித்த ரஜினிக்கு சொந்த வாழ்வில் அடுத்தடுத்து இவ்வளவு துயரங்கள் வருவது அவரது ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் இந்த முடிவை மாற்றிக் கொண்டு சேர்ந்து வாழ வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் இருக்கும் தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு இது சம்பந்தமாக பேசியுள்ளார்.

விவாகரத்து முடிவை மாற்றிக் கொண்டு இருவரும் ஒன்று சேர்ந்து வாழுங்கள் என்று அவர் தன் மகளுக்கு அறிவுரை கூறியுள்ளார். அப்படி செய்யாவிட்டால் இனி என்னுடன் பேசாதே என்றும் கோபமாக கூறியுள்ளார். பிறகு லதா ரஜினிகாந்தும் ஐஸ்வர்யாவுக்கு போன் செய்து இதையே வலியுறுத்தியுள்ளார்.

இதுதவிர ஹைதராபாத்தில் இருக்கும் நடிகர் தனுஷும் படப்பிடிப்பு தளத்தில் மிகுந்த கவலையுடன் இருக்கிறார். அங்கு யாரிடமும் பேசாமல் தனிமையில் அவர் மிகவும் பரிதாபமாக இருக்கிறார் என்ற செய்திகளும் வெளியானது. மேலும் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய மாட்டார்கள் என்ற வதந்தியும் ஒரு பக்கம் பரவி வருகிறது.

ஆனால் உண்மையில் இந்த விஷயத்தில் ஐஸ்வர்யா தான் முடிவு செய்ய வேண்டும். அப்பாவுக்கு செல்ல மகளான ஐஸ்வர்யா இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுப்பார் என்று பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஷாருக்கான் எப்படி தனது பையனால் மனவேதனையில் தற்போது வரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கிறாரோ அதேபோல் ரஜினியும் மன வேதனையில் உள்ளாராம்.

Trending News