1. Home
  2. கோலிவுட்

செம பாலிஷான ஐஸ்வர்யா.. அச்சி அசல் காஜல் மாதிரி இருக்கும் புகைப்படம்

செம பாலிஷான ஐஸ்வர்யா.. அச்சி அசல் காஜல் மாதிரி இருக்கும் புகைப்படம்

காக்கா முட்டை படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு முன்னணி நடிகை இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றால் பலரும் மறுத்து விடுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலுடன் காக்காமுட்டை படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். சமீபகாலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான திட்டம் இரண்டு படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் கிராமத்து சாயலில் இருக்கும். முன்னணி நடிகர்களான விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோமோண்டே சுவிசேஷங்கள் என்ற மலையாள படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். தற்போது மீண்டும் மலையாளத்தில் புலிமட என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் குடும்பத்துடன் காஷ்மீர் சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. தற்போது அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் டி-ஷர்ட் அணிந்தபடி காபி குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இவருடைய சாயல் அப்படியே கஜோல் போல இருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. செம பாலிஷான ஐஸ்வர்யா.. அச்சி அசல் காஜல் மாதிரி இருக்கும் புகைப்படம் aishwrya
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.