வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஏதோ போதைல ட்வீட் போட்டுட்டு இருக்கு போல.. யாஷிகாவை வெளுத்து வாங்கும் தல ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா, சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் நபர். இவர் தற்போது தல அஜித்தின் மனைவி ஷாலினி பெயரில் பொய்யான ஐடி மூலம், ட்விட்டரில் அஜித் மற்றும் ஷாலினி இருவரின் புகைப்படத்துடன் முதன்முதலாக ட்விட்டருக்கு வருகை தந்துள்ளேன் என்று ஷாலினி போல் பேசியிருக்கும் நபரை ப்ரோமோட் செய்யும் விதத்தில் ‘வெல்கம் மேன்’ என்று யாஷிகா கமெண்ட் செய்துள்ளார்.

பிரபலம் ஒருவர் புதிதாக சோஷியல் மீடியாவில் நுழைந்தால் தன்னுடைய சமீபத்திய புகைப்படத்தை பதிவு செய்வார். ஆனால் இந்த போலியான நபர் ஏற்கனவே ஷாலினி-அஜீத் சேர்ந்து இருக்கும் பழைய புகைப்படத்தை பதிவிட்டு இருப்பதைக் கூட அறிந்துகொள்ளாமல் அந்தப் போலியான நபரை ஆதரிக்கும் விதத்தில் யாஷிகா கமெண்ட் செய்திருக்கிறார்.

yashika-twit-cinemapettai
yashika-twit-cinemapettai

ஏற்கனவே அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, அஜீத் மனைவி ஷாலினிக்கு ட்விட்டரில் எந்த கணக்கும் இல்லை. ஷாலினி அஜித்குமார் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு துவங்கப்பட்டிருப்பதாக ட்விட் செய்திருந்தார்.

அப்படியிருக்கும்போது ஒருத்தருடைய ஐடி ஒரிஜினலா அல்லது போலியானதா என்பது கூட தெரியாமல் குடிபோதையில் ட்விட் செய்து கொண்டிருக்கிறாயா? என்று யாஷிகாவை தல ரசிகர்கள் ட்விட்டரில் கிழித்து தொங்க விடுகின்றனர்.

அத்துடன் பைத்தியக்காரி மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சிட்டியா என்றும் சிலர் யாஷிகா கழுவி கழுவி ஊற்றுகின்றனர். இதுபோன்று யாஷிகா சமூக வலைத்தளங்களில் செய்யும் சிறு சிறு லீலைகளை நெட்டிசன்கள் தாறுமாறாக பங்கம் செய்துகொண்டிருக்கின்றனர்.

இதை நிரூபிக்கும் விதமாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஷாலினி சமூகவலைத்தளங்களில் இணையவில்லை என்றும் இது ஒரு ஃபேக் ஐடி என்பதையும் தெளிவாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

suresh-chandra-twit
suresh-chandra-twit

Trending News