வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

யாஷிகாவுக்கு முன் அபிராமியுடன் தொடர்பில் இருந்த பிக்பாஸ் பிரபலம்.. வெளிப்படையாக கூறிய காரணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடிவு பெற்றதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. 24 மணி நேரமும் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பல ரகசியங்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர் நிரூப். இவர் கடந்த சீசனில் மிகவும் ஸ்ட்ராங்கான போட்டியாளர் என்று கருதப்பட்டவர். அதில் பைனல் போட்டி வரை சென்று வெளியேற்றப்பட்ட அவர் மீண்டும் புதிய தெம்புடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இவர் ஏற்கனவே கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை யாஷிகா உடன் இருந்த காதலை பற்றி வெளிப்படையாகச் சொன்னார். தற்போது அவர்கள் இருவரும் பிரிந்து நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் நிரூப் தனக்கு இருந்த மற்றொரு காதலைப் பற்றியும் வெளிப்படையாக இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

அதாவது இந்த நிகழ்ச்சியில் நாமினேஷன் தொடங்கிய போது நாமினேட் செய்ய வந்த நிரூப் சக போட்டியாளர் அபிராமியை நாமினேட் செய்தார். அதற்கான காரணத்தை கூறிய அவர், அபிராமியும், நானும் சில வருடங்களுக்கு முன்பு ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம்.

அப்போது நான் பார்த்த அபிராமிக்கும் இப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அபிராமிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நான் பழகிய அபிராமி இப்போது இல்லை, வேறு யாரையோ பார்ப்பது போல் இருக்கிறது. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.

நிரூப், அபிராமி இருவரும் காதலித்த செய்தி ஊடகங்களில் வெளிவந்து இருந்தாலும், பலருக்கும் இதைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது அவரே இந்த விஷயத்தை வெளிப்படையாக கூறியுள்ளது புதிய தகவலாக இருக்கிறது.

கடந்த சீசனில் உணர்ச்சிப் பிழம்பாக இருந்த அபிராமி தற்போது இந்த நிகழ்ச்சியில் கொஞ்சம் திமிராக நடந்து கொள்கிறார். அதுமட்டுமில்லாமல் சில நாட்களுக்கு முன் அபிராமி பிக்பாஸ் வீட்டில் புகை பிடித்த காட்சி ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News